ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. காலை முதல் இரவு வரை இதில் டெலிகாஸ்ட் ஆகும் பல நெடுந்தொடர்கள் டிஆர்பியில் கல்க்கி வருகின்றன. புதுமுக நடிகர், நடிகைகளுக்கும் ஜீ தமிழில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரசிகர்களுக்கு டான்சராக அறிமுகமாகி பின்பு சின்னத்திரை ஹீரோவாக மாறியவர் புவியரசு. ஜீ தமிழில் ஒளிப்பரப்பான அழகிய தமிழ் மகள் சீரியல் மூலம் நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தார் புவி. பின்பு பெண்களுக்கு மிகவும் பிடித்தமான சின்னத்திரை நாயகனாக மாறினார்.
புவியரசு மிகச் சிறப்பாக நடனம் ஆட கூடியவர். ஜீ தமிழ் டான்ஸ் ஷோவில் இவரின் நடனத்தை பல வெள்ளித்திரை பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். அதில் நடிகை சினேகாவும் ஒருவர். சினேகா நடுவராக இருந்த ஷோவில், புவியரசு நடனம் ஆடி கைத்தட்டல்களை அள்ளியுள்ளார். இதுத்தவிர புவியரசு பாக்ஸரும் கூட. முறையாக பாக்ஸிங் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் வித்யா நம்பர் 1 மற்றும் இதயம் தொடர்களில் இவர் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
கடந்தாண்டு புவிக்கு பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றது. தனது மனைவியை ஜீ தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கும் அழைத்து வந்திருந்தார் புவியரசு. இந்நிலையில் புவியரசுக்கு நேற்று முன் தினம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை புவி, தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தப்பட்டி ”இந்த உலகுக்கு உன்னை வரவேற்கிறேன் மகனே” என குறிப்பிட்டுள்ளார். புவியரசுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லை நடிகை சினேகாவும் தனது வாழ்த்தை புவியரசுக்கு இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation