
இந்தியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் தொடங்கப்பட்டு தற்போது 7வது சீசனாக தொடர்ந்து வருகிறது. பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர். ஆனால் பிக் பாஸ் முடிந்த பின்பு அவர்கள் நிலை, பாசிடிவ், நெகடிவ் என இரண்டும் கலந்ததாக உள்ளது. இதனால் தற்போது வெள்ளித்திரை பிரபலங்களை காட்டிலும் சின்னத்திரை பிரபலங்கள் தான் அதிகம் பிக் பாஸில் கலந்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் டிவி பிரபலங்களின் ஆதிக்கம் பிக் பாஸில் அதிகம் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 குறித்த அறிவிப்பு புரமோவுடன் கடந்த வாரம் வெளியானது. இந்த சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்கள் குறித்த தேடல் வேகமாக நடந்து வருகிறது. விஜய் டிவி பிரபலங்கள் மாகாபா, வீஜே ஜாக்குலின், கலக்க போவது யாரு சரத், குக் வித் கோமாளி பாலா, சுனிதா, ரேகா நாயர், பப்லு, ரச்சிதாவின் கணவர் தினேஷ், ஸ்ரீதர் மாஸ்டர், உமா ரியாஸ், குக் வித் கோமாளி அஸ்வின் eன பலரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் கசிந்தன.

இந்த முறை பிக் பாஸில் கூடுதல் அமசங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. அதில் 2 வீடு என்பது புரமோ மூலம் தெரிந்து விட்டது. அதே போல் போட்டியாளர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 செல்லும் மற்றொரு போட்டியளரின் விவரம் இணையத்தில் கசிந்துள்ளது. சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி பிக் பாஸ் சீசன் 7க்கு செல்கிறார் என கூறப்படுகிறது.
நாட்டுப்புற பாடகியான இவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார். புஷ்பா படத்தில் சாமி பாடல் பாடிய இன்னும் பிரபலமானார். இந்நிலையில் பிக் பாஸில் எப்போதுமே நாட்டுப்புற கலைஞர்கள் பங்கு கொள்வார்கள். அந்த லிஸ்டில் இந்த முறை செந்தில் ராஜ்லட்சுமி இணைய உள்ளார் என கூறப்படுகிறது. சேனல் தரப்பில் அவரிடம் பேசப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் செந்தில் ராஜாலட்சுமி இந்த தகவலை தற்போது வரை உறுதி செய்யவில்லை. செந்நில் ராஜலட்சுமியை தவிர இந்த லிஸ்டில் விஜே பாவானா, தர்ஷன் போன்றோரின் பெயரும் தற்போது அடிப்பட தொடங்கியுள்ளது.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com