தொடர்ந்து பேக் டூ பேக் ஹிட் கொடுக்கும் சிம்புவின் பத்து பல திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகியது. 2023 ஆம் ஆண்டு கோலிவுட் வரிசையில் பத்து தல சூப்பர் டூப்பர் படம் என்றே சொல்லலாம். சிம்புவின் நடிப்பு, திரைக்கதை ரசிகர்களால் பெரிதளவில் பாராட்டப்பட்டது. குறிப்பாக ஏ.ஆர் ரகுமானின் இசை படம் முழுவதும் தெறிக்க விட்டது. இந்த படத்தின் வசூல் மூலம் சிம்பு மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்து விட்டார்.ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படத்திற்கு பிறகு இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா சிம்புவை வைத்து பத்து தல படத்தை இயக்கினார்.
மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களுக்கு பிறகு பத்து தல ரிலீஸாகியது. ஆனால் அதே சமயம் வெந்து தணிந்தது காடு படத்தின் க்ளைமேக்ஸ் சீனில் சிம்பு, பத்து தல லுக்கில் என்ட்ரி கொடுத்திருப்பார். அப்போதே படத்தின் மீதான் ஆர்வம் அதிகரித்தது. பத்து தல திரைப்படம் இது கன்னட ரீமேக் என்பது அனைவரும் அறிந்தது. கன்னடத்தில் சிம்பு நடித்த ரோலில் சிவ ராஜ்குமார் நடித்து இருந்தார். கன்னடத்தில் இந்த திரைப்படத்திற்கு மஃப்டி என பெயர் வைக்கப்பட்டிருந்தது.
சிம்பு நடிப்பை போல, ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், கவுதம் கார்த்திக் ரோகளும் பெரிதளவில் பேசப்பட்டன. சரியாக 1 மாதங்கள் கழித்து படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியது. ஓடிடியிலும் ரசிகர்கள் படத்தை கண்டுகளித்தனர். இந்நிலையில் இப்போது பத்து தல திரைப்படம் டிவியிலும் ஒளிப்பரப்பாகவுள்ளது.
வருகிற ஜூன் 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட இருக்கிறது. இதற்கான புரமோவை ஜீ தமிழ்ன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விடுமுறை தினம், என்பதால் பத்து தல படத்திற்கு நல்ல ரேட்டிங் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com