தீப ஒளியிலே இறைவனை வழிபடக் கூடிய நாளாகவும், தீபங்களை வரிசையாக அடுக்கி ஏற்றி வைத்து வழிபடும் நாளாகவும், விரத நாளாகவும் முன்னோர்கள் நமக்கு கொண்டாட கற்றுக் கொடுத்த அழகான பண்டிகை நாள் இந்த தீபாவளி. இந்த ஆண்டு தீபாவளி கேதார கெளரி விரத நாளோடு இணைந்து வருவதால் சிவபெருமானை வழிபடும் நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும். தீபாவளி பண்டிகை 31ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில் பண்டிகையின் வரலாறு, கொண்டாத்தின் முக்கியத்துவம், கங்கா ஸ்நான நேரம், சிவபெருமானை வழிபடும் நேரம், வீட்டில் செல்வம் பெருகிட லட்சுமி குபேர பூஜை செய்யும் உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வருடம் தீபாவளி பூஜையை காலை 4 மணி முதல் காலை 6 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி நாளில் பொழுது விடியும் முன்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளிப்பது மிகவும் நல்லது. தலையில் நல்லெண்ணெய் வைத்து உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து குளித்து கங்கா ஸ்நான செய்வதால் தெய்வங்களின் அருள் எளிதில் கிடைக்கும்.
வீட்டின் பூஜை அறையில் படையல் போட்டு தீபாவளிக்கு தயாரித்த பலகாரங்களை வைத்து மண் விளக்குகளால் ஓம் வடிவம் உருவாக்கி அனைத்தையும் ஏற்றவும். 15 விளக்குகள் அல்லது 51 விளக்குகளை வைக்கவும்.
சிவபெருமானின் லிங்கம் இருந்தால் அபிஷேகம் செய்யுங்கள். இந்த நேரத்தில் மின் விளக்குகள் நிறுத்திவிட்டு அன்போடு இறைவனை வேண்டி வெளியே ஒருவரை பட்டாசு வெடிக்கச் சொல்லி தீபாவளி கொண்டாடவும். காலை 6 மணிக்குள் பூஜையை நிறைவு செய்யவும்.
தொழில் செய்யும் நபர்களுக்கு, நன்நாளிலும் தாமதமாக எழும் சோம்பேறிகளும் மற்றொரு நல்ல நேரத்தில் பூஜை செய்யலாம்.
தீபாவளி பூஜை நேரம் : காலை 8 மணி முதல் காலை 9.30 மணி வரை
மேலும் படிங்க கந்த சஷ்டி விரதம் கடைபிடித்து முருகனை வழிபடுங்கள்! வாழ்க்கையில் சிக்கல்கள் தீரும்
வீட்டில் செல்வம் பெருகிட, மகிழ்ச்சி ததும்ப, நல்ல விஷயங்கள் அரங்கேற தீபாவளி நாளில் நேரம் பார்த்து லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். தீபாவளிக்கு கறி எடுக்கும் பழக்கம் இருந்தால் லட்சுமி பூஜையை மறுநாள் கூட தொடரலாம். மாலை 4.29 மணிக்கு அமாவாசை தொடங்கி நவம்பர் 1ஆம் தேதி வரை அமாவாசை நீடிக்கிறது.
அக்டோபர் 31ஆம் தேதி மாலை 6 - நவம்பர் 1ஆம் தேதி மாலை 5 மணிக்குள்
இந்து புராணங்களின்படி தீபாவளி பண்டிகை தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை குறிக்கிறது. விஷ்ணு பகவானின் ஏழாவது அவதாரமான ராமர் போரில் ராவணனை வீழ்த்தி அயோத்திக்கு திரும்பியதை அம்மக்கள் விளக்குகள் ஏற்றி, வீடுகளை அலங்கரித்து வாசலில் கோலமிட்டு தீபாவளியாக கொண்டாடினர். தென் இந்தியாவில் கிருஷ்ண பகவான் நரகாசூரனை கொன்றதை குறிக்கும் விதமாக தீபாவளி கடைபிடிக்கப்படுகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com