தீபாவளிக்கு சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நாளில் மக்கள் புத்தாடை அணிந்து, வகை வகையான பலகாரங்கள் செய்து சாப்பிடுவது, வீட்டை மின் விளக்குகளால் அலங்கரித்து, ஒளிமயமான தீபாவளியை கொண்டாடவே மக்கள் நினைக்கிறார்கள். எனவே, தீபாவளி அன்று வீட்டை சந்திரனைப் போல வைத்திருக்க விரும்பினால், இந்தக் கட்டுரையில் உள்ள வீட்டு அலங்கார குறிப்புகளைப் பின்பற்றி, எளிய முறையில் அலங்கரிக்கவும்.
வீட்டின் அனைத்து கதவுகளிலும் அழகான தோரணங்களை தொங்கவிடலாம். சந்தையில் அனைத்து வகையான தோரணங்களையும் நீங்கள் காணலாம், அவற்றை உங்கள் கதவுகளில் தொங்கவிடலாம். தீபாவளியன்று புதிய பூக்களிலிருந்து தோரணங்களை வாங்கி கட்டலாம். ஆனால், உங்கள் வீட்டில் 2-3 நாட்கள் அலங்கரத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் டிசைனர் தோரணங்களை வாங்கலாம்.
வீட்டை அழகாக அலங்கரிக்க, தொங்கும் தொட்டிகளை வைக்கலா,. செயற்கை பூந்தொட்டிகள் அறைகளை சந்திரனைப் போல அழகாக மாற்றும். சந்தையில் இந்த கவர்ச்சிகரமான பூந்தொட்டிகளை 6 துண்டுகளுக்கு 500 ரூபாய் வரை காணலாம். வீட்டு ஹாலை அலங்கரிக்க அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த அலங்காரங்கள் 3-4 நாட்கள் நீடிக்கும். நீங்கள் விரும்பினால், அவற்றை இன்னும் நீண்ட காலம் வைத்தும் அழகுப்படுத்தலாம்.
மேலும் படிக்க: தீபாவளிக்கு மலர் மாலைகளை பயன்படுத்தி உங்கள் வீட்டை இப்படி அலங்கரியுங்கள்!
தீபாவளி என்பது விளக்குகளின் திருவிழா என்று அழைக்கப்படுகிறது. உங்கள் வீட்டை பிரகாசமாக்க அல்லது இருளைப் போக்க, உங்கள் வீட்டில் மற்றும் பால்கனியில் விளக்குகள் ஏற்றி அழகுப்படுத்தலாம் அல்லது வீட்டை LED ஸ்ட்ரிப் விளக்குகளால் அலங்கரிக்கலாம். இது பண்டிகைக் காலத்தில் உங்கள் வீட்டை இன்னும் அழகாக மாற்றும்.
மேலும் படிக்க: தீபாவளிக்கு வீட்டிற்கு பெயின்ட் அடித்தால் இத்தனை நன்மைகள் உறுதி!
இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com