
தமிழகத்தில் கார்த்திகை மாதம் வரக்கூடிய முக்கிய பண்டிகை நாட்களில் ஒன்றாக உள்ளது பெரிய கார்த்திகை, திருக்கார்த்திகை, கார்த்திகை தீபம் என பல பெயர்களைக் கொண்ட இந்த நாளில் வீட்டு வாயில் மற்றும் வீட்டு முற்றத்தில் விளக்கேற்றும் போது நன்மைகள் பலவற்றைப் பெற முடியும் என்பது ஐதீகம். கார்த்திகை மாத பௌர்ணிமியில் வரக்கூடிய திருக்கார்த்திகை நாள் இந்தாண்டு டிசம்பர் 3 ஆம் தேதி வரவுள்ளது. இந்த நாளில் மக்கள் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதற்கு முந்தைய தினமாக பரணி தீபம் ஏற்றுவது வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளைப் பெற உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் பரணி தீபமானது இன்று அதாவது டிசம்பர் 2 ஆம் தேதி வரவுள்ளது. இந்த நாளில் அனைத்து நலமும், வளமும் பெற வேண்டும் என்றால் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்? எத்தனை மணிக்கு ஏற்ற வேண்டும்? என்பது குறித்த ஆன்மீக தகவல்கள் இங்கே.
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளில் பரணி தீபம் ஏற்றும் போது, நாம் இக்காலம் மற்றும் முக்காலத்தில் செய்த பாவங்களை மட்டுமல்ல முன்னோர்கள் செய்த பாவங்களையும் அளிக்கும் சக்தி உள்ளது என்ற ஐதீகம் உள்ளது. இதற்காகவே அனைவரது வீடுகளிலும் பரணி தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த 2025 ஆம் ஆண்டில் பரணி தீப விழாவானது டிசம்பர் 2 ஆம் தேதி வருகிறது. மாலை 6.24 தொடங்கி டிசம்பர் 3 ஆம் தேதியன்று மாலை 4.47 வரை பரணி நட்சத்திரம் உள்ளது. எனவே டிசம்பர் 2 ஆம் தேதி மாலை 6.30 மணிக்குப் பிறகு பரணி தீபம் ஏற்றலாம்.
மேலும் படிக்க: கார்த்திகை மாதம் வந்தாச்சு; திருக்கார்த்திகையில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் தெரியுமா?
பெரிய கார்த்திகை என்றழைக்கப்படும் திருக்கார்த்திகைக்கு முந்தைய தினம் ஏற்றப்படும் பரணி தீபத்தை எப்போதும் ஒரு தாம்பூலத்தில் வைத்து ஏற்ற வேண்டும். வீட்டு பூஜை அறையில் சாமி படங்களை அனைத்தும் துடைத்து மலர்கள் வைத்து வழக்கமான விளக்குகளை ஏற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தாம்பூலத்தில் ஐந்து தீபங்களை வைத்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். ஐந்து திசைகளிலும் விளக்குகளைத் திருப்பி வைப்பது நல்லது.
மேலும் படிக்க: திருக்கார்த்திகை ஸ்பெஷல்: உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பனையோலைக் கொழுக்கட்டை!
பரணி தீபத்தை முறையாக வீட்டில் ஏற்றும் போது வீட்டில் பணமும், நிம்மதியும் கிடைக்கும் கிடைக்கும். மேலும் இந்த நாளில் தீபம் ஏற்றி மனமுருகி சிவபெருமானை வழிபடுகிறோமோ? அவர்கள் பூலோகத்தில் மட்டுமல்ல எமலோகத்திலும் துன்பம் எதுவும் இல்லாமல் இன்பமுடன் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com