பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபாடு மேற்கொள்ளக் காரணம் இது தான்!

வழிபாட்டிற்காக வைக்கப்படும் தண்ணீரை தினமும் மாற்றும் போது, வீட்டில் எப்போதுமே நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். 

pooja room worship

வீடுகளில் அல்லது கோவில்களில் எப்போது வழிபாடுகள் மேற்கொண்டாலும் ஒரு சிறிய டம்ளரில் தண்ணீர் வைத்து வழிபடுவதைப் பார்த்திருப்போம். இதுவரை ஏன் என்று நம்மில் பலர் யோசித்தது இல்லை. ஆனால் பிரசாதம் என்று வழிபாடுகள் முடித்த பின்னதாக அந்த தண்ணீர் குடித்து விட்டு தலையில் தேய்த்துக் கொள்வோம். ஆனால் ஒரு சிலருக்கு தண்ணீர் வைத்துத் தான் வழிபட வேண்டுமா? என்பது கூட தெரியாது. இதோ இன்றைக்கு பூஜை அறையில் ஏன் தண்ணீர் வைத்து வழிபாடுகள் மேற்கொள்ள வேண்டும்? இதனால் என்னென்ன பலன்களைப் பெற முடியும்? என்பது குறித்த சில ஆன்மீக தகவல்கள் இங்கே.

worship follow in daily

பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபாடு:

வாஸ்து முறைப்படி பூஜை அறையில் தண்ணீர் வைத்து வழிபடுவதால் வாழ்க்கையில் செழிப்பான சூழலையும், நேர்மறையான எண்ணங்களையும் மேம்படுத்த முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த தண்ணீரை அறையில் வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் வைத்து வழிபாடுகள் மேற்கொள்ள வேண்டும். வீட்டில் வழிபாடுகளில் நமக்குப் பிடித்த தெய்வங்களை நினைத்து வேண்டிய காரியங்கள் நிறைவேற வேண்டும் என்று பிராத்தனை செய்வார்கள். இவ்வாறு செய்யும் போது நேர்மறை ஆற்றல்கள் எப்போதும் தண்ணீர் இறங்கும் என்பது ஐதீகம். மேலும் துளசி இலைகளைக் கொண்டு செய்யப்படும் தண்ணீரை வைத்து வழிபட்ட பின்னதாக, இந்த நீரை அருந்தும் போது மருத்துவக் குணங்களைப் பெற முடியும். அதே சமயம் துளசி நீரைக் குடிப்பது உங்களது மனதையும், உடலையும் சுத்தப்படுத்த உதவியாக இருக்கும்.

பூஜை அறையில் தெய்வங்களுக்கு பழங்கள், இனிப்புகள் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற ஏதாவது ஒரு பொருட்களை வைத்து சாமிக்கு நைவேத்யா செய்வோம். இதன் பின்னதாக பிரசாதமாக பூஜைக்காக வைத்த தண்ணீர் வழங்கப்படும் போது அவர்களது வாழ்க்கையில் செழிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. பூஜை அறையில் வெள்ளி,தாமிரம், செம்பு,மண் போன்றவற்றால் ஆன பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் இரும்பு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. இது எதிர்மறையான ஆற்றல்களை உங்களுக்கு ஏற்படுத்தும்.

மேலும் படிக்க:வீட்டில் அமைதியும், செல்வமும் கிடைக்க இந்த திசைகளில் விளக்கேற்றவும்!

pooja timings

துளசி நீர் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்தால், இதை தீர்த்தமாக அருந்தலாம். இல்லையென்றால் பூஜை முடித்த பின்னதாக அந்த தண்ணீர் வீட்டின் மேல் ஊற்றி விட வேண்டும் இவ்வாறு செய்யும் போது வீட்டின் துர்சக்திகள் உங்களை ஒருபோதும் அண்டாது. இதோடு நேர்மறை ஆற்றல்களைக் கொண்டு வர வேண்டும் என்றால், வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். மேலும் வழிபாட்டிற்காக வைக்கப்படும் தண்ணீரை தினமும் மாற்றுவதை மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நிச்சயம் வீட்டில் எப்போதுமே நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற சுவாரஷ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் -HerZindagi Tamil

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP