
தமிழ் மாதங்களில் வழிபாட்டிற்கு உகந்ததாகவும், சிறப்பு மிகுந்த மாதங்களாகவும் உள்ளது ஆடி. அம்மனுக்கு வழிபாடுகள் மேற்கொள்வது, புதுமணத் தம்பதிகளுக்குத் தாலி பிரித்துக் கோர்ப்பது முதல் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் வழங்குவது வரை ஒவ்வொருவன்றையும் சிறப்பாக செய்வதற்காக ஆடி மாதத்தில் பல விசேச நாள்கள் உள்ளது. இன்றைக்கு ஆடி அமாவாசையில் ஏன் தர்ப்பணம் கொடுக்கிறோம்? இதன் சிறப்புகள் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: Aadi Krithigai 2024: ஆடி கிருத்திகை 2024 எப்போது? கடைப்பிடிக்க வேண்டிய விரதம் மற்றும் வழிபாட்டு முறைகள்!
உலகில் பிறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தாய், தந்தை. இவர்களை இருக்கும் போது மதிக்கவில்லையென்றாலும் இல்லாத காலத்தில் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியது அவர்களது வாரிசுகளின் கடமைகளில் ஒன்று. அதிலும் அமாவாசை நாளில் அவர்களை நினைத்து வழிபடுவதால் வாழ்க்கையில் பல நன்மைகளைப் பெற முடியும் என்பது ஐதீகம். ஆனால் இன்றைய இயந்திர உலகில் அனைத்து அமாவாசை நாட்களிலும் நம்முடைய முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவது என்பது முடியாத காரியம்.
இந்த சூழலில் தான் ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை என இந்த மூன்று நாள்களிலும் வழிபட்டால் பல ஆண்டுகள் வழிபட்டதற்கு சமம் என்றும், செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என கூறப்படுகிறது.
குறிப்பாக ஆடி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை நாளில் மறைந்த நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு புறப்படும் நாள் என்பதால் இந்த நாளில் அவர்களை வழிபடுவதால் அத்தனை நன்மைகளையும் பெற முடியும். குறிப்பாக முன்னோர்களின் பாவம் நீங்க பித்ரு தோஷ பரிகாரங்களைச் செய்வதற்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. எனவே கடல் அல்லது நீர் நிலையில் ஆடி அமாவாசையன்று மாலை 3 மணிக்குள் இந்த பரிகாரங்களைச் செய்ய வேண்டும். அப்போது நீர் நிலைப் பகுதிகளில் எள்ளும் தண்ணீரும் கலந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அமாவாசை நாளில் எள்ளும், தண்ணீரும் வைத்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யும் போது, நேரடியாக அவர்களைப் போய் சேரும். அவர்களின் ஆசியையும் நாம் நேரடியாக பெற முடியும். இதுவரை நாம் செய்த பாவங்கள் மற்றும் முன்னோர்கள் செய்த பாவங்களை நீக்க ஆடி அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்து வழிபடவும். ஆடி அமாவாசை இந்தாண்டு ஆகஸ்ட் 4 ல் வருகிறது.
ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்கலாம். ஒருவேளை அங்கெல்லாம் செல்ல முடியவில்லையென்றாலும் வீடுகளில் முன்னோர்களை நினைத்து வழிபடவும். பின்னர் சைவ உணவுகளை சமைத்து வாழை இலையில் வைத்துப் பரிமாறவும். காகத்திற்கு வைத்த பின்னதாக முன்னோர்களை நினைத்து விரதம் இருப்பவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
மேலும் படிக்க: வீட்டில் அமைதியும், செல்வமும் கிடைக்க இந்த திசைகளில் விளக்கேற்றவும்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை நாளில் இதுவரை உங்களுடைய முன்னோர்களுக்கு நன்றி செலுத்த மறந்திருந்தால், இனிவரும் காலங்களில் கட்டாயம் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். முன்னோர்களின் ஆசியைப் பெறுவீர்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com