தமிழ் மாதங்களில் 4 வது மாதமான ஆடி மாதம் வந்தாலே வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் அலைமோதும். அம்மனுக்கு கூழ் ஊற்றுவது தொடங்கி ஆடி மாதத்தில் பல ஊர் திருவிழாக்களும் நடப்பது வழக்கம். இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படும் இந்த ஆடி மாதத்தில் இதுபோன்ற விசேசங்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு பக்தர்களும் ஆடி கிருத்திகைக்காகக் காத்திருப்பார்கள். ஏன் இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது? இந்த மாதம் எந்த தேதியில் ஆடி கிருத்திகை வருகிறது? என்பது குறித்த ஆன்மீக தகவல்களைக் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: ஆடி வெள்ளிகளில் அம்மனுக்கு படைக்கும் ஸ்பெஷல் கூழ் செய்வது எப்படி?
ஆடி கிருத்திகை நாளானது போர், வெற்றி, ஞானம், அன்பு, பாசம் ஆகியவற்றின் கடவுளாகப் போற்றப்படும் தமிழ் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த சிறப்பான நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் வளமும், ஆரோக்கியமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக முருகப் பெருமானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இவ்விழாவை தமிழகத்தில் அறுபடை வீடுகள் மட்டுமல்லாது, முருகன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பாக கொண்டாடப்படும்.
சிவன், பார்வதியின் அருளால் உருவானவர் முருகப்பெருமான் என கூறப்படுகிறது. குழந்தையிலிருந்தே இவர் 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டார். இந்த 6 பெண்களைக் கௌரவிக்கும் விதமாக கிருத்திகை மற்றும் ஆடி கிருத்திகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளையும் பெற முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க: ஆடி மாதத்தில் அம்மன் அருள் பெறுவதற்குப் பெண்கள் இதைப் பின்பற்றுங்கள் போதும்!
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com