
உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் பிரதான கடவுளாக உள்ளது முருகன். தமிழ்க் கடவுள் என்றழைக்கப்படும் முருகனுக்காக எத்தனையோ விரத முறைகள் இருந்தாலும், கந்த சஷ்டி விரதத்தைக் கடைப்பிடிப்பது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் வாரமாக அமைகிறது. ஆம் ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்குப் பிறகு வரும் அமாவாசை பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாள்கள் கந்த சஷ்டி விரதமான கடைப்பிடிக்கப்படும். இந்த நாள்களின் இறுதி நாளில் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறும்.
மேலும் படிக்க: Kantha Sashti Viratham 2025: 48 நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கும் நேரம்; விரத நாளில் முருகனை வழிபடும் முறைகள்
தமிழ் கடவுளான முருகன், தீமை செய்யக்கூடிய அசுரன் சூரபத்மனை வதம் செய்ய அவதாரம் எடுத்து வரக்கூடிய நாள் தான் சூரசம்ஹாரம். தமிழகத்தைப் பொறுத்தவரை திருச்செந்தூரில் அமைந்துள்ள செந்திலாண்டவர் திருக்கோவில் சூரசம்ஹார நிகழ்வு விமர்சியாக நடைபெறும். கடற்கரை முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். கடல் அலைகளுக்கு இடையே மக்களின் கூட்டமும் அதிகரிப்பதைப் பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக அமையும். இந்த நிகழ்வைக் காண்பதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகைத் தருவார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் மட்டுமல்ல, முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழநி, சுவாமிலை, திருத்தணி, பழமுதிர்சோலை போன்ற பிற இடங்களிலும் சூரசம்ஹார நிகழ்வான சிறப்பாக நடைபெறும். அறுபடை வீடுகள் மட்டுமல்ல, தமிழகத்தில் எங்கெல்லாம் முருகன் திருத்தலங்கள் உள்ளதோ? அங்கெல்லாம் சூரசம்ஹார நிகழ்வானது சிறப்பாக நடைபெறும்.
மேலும் படிக்க: வாழ்க்கையில் நினைத்த காரியம் நிறைவேற விரும்பினால் இந்த முருகன் மந்திரங்களை சொல்லுங்கள்
இந்தாண்டிற்கான கந்தசஷ்டி விரத முறையானது கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த நாளிலிருந்து முருகனை மனமுருகி பக்தர்கள் தினமும் விரதம் இருந்து வருகிறார்கள். ஆனால் அனைவராலும் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு விரதத்தைக் கடைப்பிடிக்க முடியாது. எனவே கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளான சூரசம்ஹார தினத்தில் காலையிலிருந்து விரதம் இருக்கலாம். வீட்டிலோ அல்லது முருகன் கோவிலுக்குச் சென்றோ? வழிபாடுகளை மேற்கொள்ளவும். மாலையில் விரதத்தை மகிழ்வோடு முடிக்கவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com