சமையலில் சிறிதளவு பயன்படுத்தப்படும் மூலிகை பொருளான மிளகு உடல் நலனுக்கு மிகவும் நல்லது. தொண்ட கரகரப்புக்கு மிளகை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிப்பது அல்லது வாயின் ஓரத்தில் மென்று விழுங்காமல் இருப்பது, காய்ச்சலுக்கு மிளகு ரசம் வைத்து சாப்பிடுவது என மிளகை பயன்படுத்தியிருப்போம். ஜோதிடத்தின்படி மிளகு குறிப்பிட்ட ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. வீட்டில் மிளகு வைத்திருப்பதால் பல்வேறு பிரச்னைகள் தீருமென மக்கள் நம்புகின்றனர். மூலிகை பொருளான மிளகு வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள உதவும் என மூத்த ஜோதிடர் தகவலளிக்கிறார். தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்குவது ஆன்மிக பலன்களை கொண்டதாக ஜோதிடர் விளக்குகிறார்.
தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்கினால் மிளகின் சக்தி காரணமாக எதிர்மறை ஆற்றல் மற்றும் இரவில் தூக்கத்தை கெடுக்கும் தீய எண்ணங்கள் அகற்றப்படும் என்பது ஜோதிட கூற்றாகும். கண் திருஷ்டியில் இருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள்.
குடும்பத்தில் எப்போதாவது நிதி சிக்கல் நிலவினால் அதை தீர்த்துவிடலாம். அடிக்கடி நிதி நெருக்கடியில் சிக்கினால் மீள்வது சிரமம். கடன், பொருளாதார நிலை, வீட்டில் தொடர்ச்சியாக பண தட்டுப்பாடு நிலவினால் மிளகை தலையணையிக்கு அடியில் வைத்து தூங்கவும். இது உங்களுடைய நிதி நிலைமையில் ஏற்றத்தை கொடுக்கும்.
வாழ்க்கையில் எல்லோரும் பொதுவாக நினைக்க கூடிய விஷயம் ஒன்று உள்ளது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என வருந்துவோம். தொழில், படிப்பு, ஊதிய விஷயத்தில் நமக்கு இப்படி தோன்றலாம். இதற்கு நாம் தலையணையில் மிளகு வைத்து தூங்குவதும், பணி இடத்தில் மிளகு வைத்திருப்பதும் அதிர்ஷ்ட தேவதையை அழைத்து வந்து இலக்குகளை அடைய உதவும்.
ஒரு செயலை செய்யும் முன்பு பல முறை சிந்திப்போம். ஆனால் ஆரம்பிக்கும் போது பயமும், பதற்றமும் நம்மை தொற்றிக் கொள்ளும். அதே போல தூங்கும் போது அந்த செயலில் கெட்ட கனவுகள் வரலாம். சனி பகவானுடன் மிளகு தொடர்புடையது. எனவே சனி பகவானின் ஆசிர்வாதத்தை பெற்றால் மன நிம்மதி பெறலாம்.
மேலும் படிங்க முப்பிறவி துயர், ஏழு ஜென்ம பாவம் நீங்கிட வில்வ இலைகளால் சிவனை அர்ச்சிக்கவும்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com