உலகில் வாழும் ஜீவராசிகளின் பாவங்களை போக்குவதில் வல்லவரான ஈசன் சிவபெருமானின் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி வடிவமாகவும் பேரருள் கொண்டு தோன்றிய மகத்துவம் நிறைந்த மரம் வில்வ மரம். ஏழு ஜென்ம பாவம் நீங்க ஒரே ஒரு வில்வ இலையினால் சிவனை அர்ச்சிக்க முன்னோர்கள் அறிவுறுத்துவது உண்டு. சிவ அர்ச்சனைக்கு மிகவும் உகந்ததாக மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வில்வங்கள் உள்ளன. மூன்று இதழ், ஐந்து இதழ் மற்றும் ஏழு இதழ் கொண்ட வில்வ மரங்கள் இருந்தாலும் பெரும்பாலும் மூன்று இதழ் கொண்ட வில்வமே சிவ பெருமானின் அர்ச்சனைக்கு பயன்படுத்தப்படுகிறது.
மூன்று தளம், முக்குணம், மூன்று விழி, மூவாயுதமென கோலம் தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம் எனப்படுகிறது. வில்வ இலைகளின் பெருமையை சாஸ்திரங்கள், புராணங்கள் தெளிவாக விளக்குகின்றன. வில்வத்தின் மூன்று இலைகளும் சிவபெருமான் ஏந்தி உள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும், முக்கண்களையும் குறிப்பதாக விளங்குகின்றன. சிவபெருமானின் சூட்டினை தணிக்க முன்னோர்கள் குளிர்ச்சியான வில்வத்தை சாற்றி வழிபட்டுள்ளனர்.
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியப்போவதாக அறிந்த வேதங்கள் தப்பிப்பதற்கு ஈசனிடம் வழி கேட்டது. இதற்கு திருவைக்காவூர் திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவத்தில் நினறு தவம் செய்ய வேதங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திருவைக்காவூர் திருத்தலத்தில் தவம் இயற்றியதால் அந்த ஊருக்கு வில்வாரண்யம் என சிறப்பு பெயர் பெற்றது. அங்கு வில்வனேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது.
கோவில் அல்லது வீட்டில் வில்வ மரம் நட்டு வளர்ப்பதனால் பல்வேறு நன்மைகளை பெற முடியும் என இந்து சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலனும், வில்வ மரம் வளர்ப்பதால் உண்டாகுமாம். வில்வ மரத்தை முறையாக பூஜித்து வந்தால் எம பயம் நீங்கும். ஒரு போதும் நரகம் இல்லையென கூறப்படுகிறது. இம்மரத்தின் காற்றை முகர்ந்தால், மரத்தின் நிழல் நம்மீது பட்டால் அதீத சக்தி கிடைக்குமாம். சிவனின் திருவருட் கடாட்சத்தை பெற முடியும்.
மேலும் படிங்க : Mahashivratri 2025 : அரும்பொருள் ஈசனின் ஆசியை பெற 4 கால பூஜை நேரம், சிவராத்திரி வழிபாட்டு முறை
வில்வ பழத்தின் சதையை நீக்கி அதை உலர்த்தி குடுவையாக மாற்றி அதில் விபூதி வைத்து ஈடுவது மேலானது. சிவபெருமானுக்கு மனமுருகி வில்வார்ச்சனை செய்வதினால் முப்பிறவி துயர் நீங்குவதோடு ஆயிரம் அன்னதானம் செய்கின்ற பலன், ஆயிரம் பாடசாலைகள் அமைப்பதனால் உண்டாகும் பலன், யாக பலன்கள் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்கிறது வில்வாஷ்டகம். வில்வத்தை தொட்டு சிவனை அர்ச்சிப்பது புண்ணியத்திலும் புண்ணியம். துன்பங்கள் நீங்க உண்மையான பக்தியுடன் மனமுருகி வில்வாஷ்டம் பெறுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com