மனிதர்களை சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் போன்ற உயிரினங்கள் நமக்கு நன்மை அல்லது தீமைகளை உணர்த்துவதை "சகுணம்" என்று அழைக்கிறோம். நம் இந்தியாவில் பல சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, காக்கை வீட்டு முன் வந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள் என்றும், காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவளிப்பதற்கு சமம் என்றும் நம்பப்படுகிறது. இதே போல, வீட்டில் உள்ள பல்லி சில சமயங்களில் ஒரு சிலர் மீது விழுகிறது. அந்த வரிசையில் ஆன்மீகத்தின் படி நம் உடலில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தலையில் பல்லி விழுதல்:
பல்லி தலையில் விழுந்தால், அது கெட்ட சகுணத்தைக் குறிக்கிறது. இது எதிர்காலத்தில் வரும் துன்பங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. தலையில் பல்லி விழுந்தவருக்கு மற்றவர்களுடன் மோதல், மன அழுத்தம் அல்லது உறவினர் மரணம் போன்றவை ஏற்படலாம். இதனால் மன நிம்மதி குலையக்கூடும்.
நெற்றியில் பல்லி விழுதல்:
நெற்றியில் பல்லி விழுவது நல்ல சகுணமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இடது நெற்றியில் பல்லி விழுந்தால் கீர்த்தி கிடைக்கும், வலது நெற்றியில் விழுந்தால் செல்வம் வரும் என்று நம்பப்படுகிறது.
தலை முடியில் பல்லி விழுதல்:
பல்லி தலையில் நேரடியாக விழாமல், முடியில் தட்டி விழுந்தால், அது எதிர்காலத்தில் நன்மையைத் தரும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
முகத்தில் பல்லி விழுதல்:
முகத்தில் பல்லி விழுந்தால், வீட்டிற்கு உறவினர்கள் வரும் அல்லது சிறப்பு விருந்தினர்கள் வருவார்கள் என்று பொருள்.
புருவத்தில் பல்லி விழுதல்:
புருவத்தில் பல்லி விழுந்தால், உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து உதவி கிடைக்கும். ஆனால் கண்களில் விழுந்தால், உங்களுக்கு தண்டனை அல்லது கடும் விமர்சனம் ஏற்படலாம்.
இடது கை அல்லது காலில் பல்லி விழுதல்:
இடது கை அல்லது காலில் பல்லி விழுந்தால், அன்று மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும்.
வலது கை/காலில் பல்லி விழுதல்:
வலது பக்கத்தில் பல்லி விழுந்தால், உடல் நலக்குறைவு அல்லது சுகவீனம் ஏற்படலாம்.
மேலும் படிக்க: கோவிலில் பெண்கள் தேங்காய் உடைக்க கூடாது ஏன் தெரியுமா? என்னென்ன கஷ்டங்கள் வரும்?
பாதத்தில் பல்லி விழுதல்:
பாதத்தில் பல்லி விழுந்தால், உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
தொப்புள் பகுதியில் பல்லி விழுதல்:
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால், தங்கம், வைரம் போன்ற விலைமதிப்புள்ள பொருட்கள் உங்களுக்கு கிடைக்கும்.
தொடையில் பல்லி விழுதல்:
தொடையில் பல்லி விழுந்தால், உங்கள் பெற்றோருக்கு வருத்தம் ஏற்படும் செயல் நடக்கலாம்.
கழுத்தில் பல்லி விழுதல்:
இடது கழுத்தில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி, வலது கழுத்தில் விழுந்தால் பகை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
பல்லி உங்கள் உடலில் விழுந்தால் உடனே குளிக்க வேண்டும். பின்னர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாம் அல்லது வீட்டில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யலாம். அதே போல காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பல்லியை வணங்கினால், பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
Image source: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation