இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது நவராத்திரியின் ஒன்பதாவது நாள் வரக்கூடிய சரஸ்வதி பூஜை. கல்விக்கு அதிபதியான சரஸ்வதியும், நம்முடைய வாழ்வாதரத்திற்கு ஆதாரமாக இருக்கும் கருவிகளை வைத்து கொண்டாடப்படும் ஆயுத பூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரவுள்ள நிலையில், எப்படி வழிபட வேண்டும்? சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன? என்பது குறித்த விரிவானத் தகவல்கள் இங்கே.
மேலும் படிக்க: இன்றைய ராசிபலன் : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு தெரியுமா ?
பெண் தெய்வங்களைத் தொடர்ந்து 9 நாள் வழிபடும் பண்டிகையாக உள்ளது நவராத்திரி. முப்பெரும் தேவிகளான மலைமகள், திருமகள் மற்றும் கலைமகளை வழிபட்டு அவர்களின் அருளை முழுவதுமாக வழிபடும் நாளாக உள்ளது நவராத்திரி. இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனையும், அதற்கடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், கடைசி மூன்றாம் நாள் சரஸ்வதி தேவியை வழிபடும் முறை இருந்து வருகிறது. இந்த நாளில் புத்தகங்களை வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறுவதோடு படிப்பிலும் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கை அதிகளவில் உள்ளது.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி பூஜை அக்டோபர் 1 புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. காலை 9 மணி முதல் காலை 10 மணி வரை, மதியம் 1.30 முதல் 3.30 வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை, இரவு 7 மணி முதல் 10 மணி வரை நல்ல நேரமாகும். இதில் உங்களுக்கு எது உகந்த நேரமாக உள்ளதா? அப்போது உங்களது வீடுகளில் வழிபாடுகளை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ஏற்படும் அனைத்து திருமண தடைகளையும் போக்க உதவும் ஜாதக குறிப்புகள்
சரஸ்வதி தேவியின் முழு அருள் பெறுவதோடு, கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கீழ்வரக்கூடிய வழிமுறைகளில் உங்களது வழிபாடுகள் இருக்க வேண்டும். சரஸ்வதி பூஜைக்கு முந்தைய நாளே பூஜை அறை மற்றும் வீட்டை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூஜை நாளில் புத்தகங்கள் மற்றும் கல்வி சார்ந்த உபகரணங்கள் அனைத்திற்கும் மஞ்சள், குங்குமம் இட்டு வைக்க வேண்டும். பூஜை அறையில் உள்ள சரஸ்வதியின் புகைப்படங்களுக்கு மலர்கள் மற்றும் பால் அல்லது இனிப்பு பலகாரங்கள் ஏதாவது ஒன்றை படையல் வைக்கவும். இதே போன்று உங்களது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கருவிகளை வைத்து மேற்கூறிய நேரம் மற்றும் வழிமுறைகளில் பூஜை செய்வது நல்லது.
Image source - Freep
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com