ஆடி மாதம் வந்தாலே பெண்கள் பல வழிபாட்டு முறைகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள். இறைவனின் அருளைப் பெறுவதற்கும், மன நிம்மதியுடன் இருப்பதற்கும் இறை வழிபாடு முக்கியமானது என்றாலும், வழிபடுவதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன. ஆண்களை விட பெண்கள் தான் இறைவழிபாட்டில் அதீத ஈடுபாடுடன் இருப்பார்கள் என்பார்கள், அவர்களது வாழ்க்கை முறைகளில் சில விஷயங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதோ இறைவனின் அருளைப் பெறுவதற்கு பெண்களுக்கான முக்கியமான ஆன்மீக குறிப்புகள் சிலவற்றை உங்களுக்காக பகிர்கிறோம்.
பெண்களுக்கான ஆன்மீக குறிப்புகள்:
- நம்பிக்கையுடன் இருத்தல்: நம்முடைய உறவினர்கள், பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்பதற்கான இறைவழிபாட்டை மேற்கொள்வது தவறான நடைமுறை. முதலில் கடவுளின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கையுடன் இறை வழிபாடு மேற்கொண்டால் மட்டுமே இறைவனிள் அருளை முழுமையாக பெற முடியும்.
- தவறாமல் பிராத்தனை:தினமும் பூஜை அறையில் விளக்கேற்றி இறைவழிபாடு மேற்கொள்ள முடியவில்லையென்றாலும் வாரத்தின் இரண்டு நாட்கள் அதாவது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட வேண்டும். முன்னதாக பூஜை அறைகளை சுத்தம் செய்து வழிபட வேண்டும்.
- திருமணமான பெண்கள் கிழக்கு திசையை நோக்கி தான் குங்குமத்தை இரண்டு புருவங்களுக்கு மத்தியிலும் மற்றும் நெற்றியில் வைக்க வேண்டும்.
- வீட்டில் ஏதேனும் விசேச நாட்கள் வந்தால் இறை வழிபாடுகளை மேற்கொள்ளவும். இந்த நாட்களில் பாகற்காய், அதலக்காய் போன்ற கசப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மாமிச உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றாலும் கோவிலுக்குச் சென்று வந்த பின்னதாக சாப்பிட வேண்டும்.
- ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தப்படுத்தி மாலை 6 மணிக்குள் விளக்கிற்குப் பூ வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டின் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதோடு மட்டுமின்றி மனமும் தூய்மையாக இருக்கும்.
- ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த நாள் என்பதால், ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனுக்குப் பொங்கல் பிரசாதம் கொடுத்து வழிபடவும். கோவில்களுக்குச் செல்ல முடியவில்லையென்றால் வீட்டிலேயே பொங்கல் வைத்து அருகில் உள்ளவர்களுக்கு பிரசாதத்தைப் பரிமாறவும்.
- ஆடி மாதம் வரக்கூடிய ஆடிப்பூரம் மிகுந்த விசேச நாளாகும். குழந்தையில்லாத பெண்கள் இந்த நாளில் பெண்களுக்கு வளையல், புதிய சேலைகள் வாங்கிக்கொடுக்கவும். நிறைய பெண்களுக்கு வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு பெண்ணிற்காவது வாங்கிக் கொடுக்க முயற்சிக்கவும். இல்லையென்றாலும் கோவில்களில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறக்கூடிய ஆடிப்பூர நாளில் கோவில்களுக்குச் சென்று வழிபடவும்.

மேலும் படிக்க:உங்கள் வீட்டின் முன் இந்த செடிகள் இருந்தால் லட்சுமி உங்கள் வீட்டிற்கு குடியேறுவாள்!
பெண்களில் வீடுகளில் எப்போது விளக்கேற்றினாலும் கிழக்குத் திசையை நோக்கி ஏற்றவும். கிழக்கு திசை எப்போதுமே வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation