கோவிலுக்கு செல்லும் நாளில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது! ஆன்மிக வழிகாட்டுதல்...

கோவிலுக்கு செல்லும் நாளில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இதை நாம் பின்பற்றுவதற்கான காரணத்தை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

can we go to temple after eating non veg

முன்காலத்திலேயே அசைவம் என்ற உணவை நம்முடைய முன்னோர்கள் பெரியளவில் வரவேற்கவில்லை. அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. உணவு என்பது மனிதனின் உணர்வுகளோடும், எண்ணங்களோடும் தொடர்பு உடையது. பொதுவாக அசைவ உணவு உடலில் மந்த உணர்வை ஏற்படுத்தக் கூடியது. அசைவ உணவு சாப்பிடும் நாளில் நன்றாக தூங்க வேண்டும் எனத் தோன்றும். ஓய்விலேயே இருக்கலாம் என நினைப்போம். எந்த வேலையையும் செய்வதற்கான சுறுசுறுப்பும் உடலில் இருக்காது. இதற்கு காரணம் அசைவ உணவின் தன்மை. ஒவ்வொரு உணவிற்கும் ஒரு தன்மை உண்டு. அசைவ உணவின் தன்மை மந்த நிலையை தரக்கூடியதாகும்.

chopped meat

கோவிலுக்கு செல்லும் நபரிடம் பக்தி, அன்பு, இரக்கம், ஜீவ காருண்யம் இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஒரு உயிரை கொன்று சாப்பிட்ட பிறகு நான் தெய்வீக பக்தி உடையவன் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒரு உயிரை கொல்லும் போது நம்முடைய இரக்க குணம் கேள்விக்குறி ஆகிறது. அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் எனும் நம்புகின்ற போது ஒரு உயிரை கொன்று சாப்பிட்டு அதன் பிறகு இறைவனிடம் சென்று வழிபட்டால் அது சரியாக இருக்குமா ?

இறைவன் முன் சென்று நிற்கும் போது நம்மிடம் உண்மையான பக்தி இருப்பது அவசியம். உயிரை கொன்று அதை சாப்பிட்டு வழிபடச் செல்லும் ஒழுக்கமற்ற வாழ்வியலை நம்முடைய முன்னோர்கள் ஏற்கவில்லை.

ஒழுக்கம் என்பது மனிதனுக்கு பக்தியுடன் சேர்த்தே போதிக்கப்பட்டது. எந்தவொரு உயிரினத்தையும் கொலை செய்யக் கூடாது என்ற வாழ்வியலை பின்பற்றும் நபரே உண்மையான பக்தி கொண்டவராக இருக்க முடியும் என சொல்லப்படுகிறது. அப்படியான மனிதன் தெய்வத்திடம் சென்று தனக்கு நல்லது நடக்க நினைக்கும் போது அதற்கான அருள் நிச்சயம் கிடைக்கும்.

எனவே தான் கோவிலுக்கு சென்று வழிபடும் நாளில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்க்க நம்முடைய முன்னோர் அறிவுறுத்தினர். இதற்கு முக்கியமான காரணம் மற்றொரு உயிரை எவ்வித காரணமும் இன்றி நேசிக்க கூடிய குணமே. இரக்க குணம் உள்ள இடத்தில் நிச்சயம் பக்தி இருக்கும். பக்தி உள்ள இடத்தில் கடவுளும் இருப்பார். ஆகையால் அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு செல்ல கூடாது என ஆன்மிக வழிகாட்டுதலில் சொல்லப்படுகிறது.

அந்தக் காலத்தில் தினமும் வேலைக்குச் செல்லும் முன் கோவிலுக்கு செல்வார்கள் அல்லது சாமி கும்பிட்டு பணியை தொடங்குவார்கள். இதன் மூலம் அன்றாடம் சைவ உணவு முறையை பின்பற்றவே பெரியவர்கள் நம்மிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளனர்.

அனைத்து உயிரையும் சிவமாக பார்க்க கற்றுக் கொண்டால் மற்றொரு உயிரை கொலை செய்து சாப்பிடும் எண்ணம் நமக்கு ஏற்படாது. மனித நேயம் உள்ள நபராக வாழ சைவ உணவு முறையைப் பின்பற்றுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP