இந்த வருடம் தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூசத்தையொட்டி முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. பொதுவாக முருகப்பெருமானுக்கு 48 நாட்கள் விரதம் கடைபிடித்தால் பல நன்மைகளை பெறலாம் என்பது நம்பிக்கை. ஆனால் இன்றைய
வாழ்வியல் சூழ்நிலை, பெண்களுக்கு மாதவிடாய் போன்ற காரணங்களால் முருகப்பெருமானுக்கு 48 நாட்கள் விரதம் இருப்பது சவாலாக அமைந்துவிடுகிறது. இதற்கு இணையாக மகத்துவமான 21 நாட்கள் விரதம் இருக்கிறது. முருகப்பெருமானுக்கு 21 நாட்கள் விரதம் இருப்பது குறித்து முழு விவரம் இங்கே...
முருகப்பெருமானுக்கு 21 நாட்கள் விரதம்
எண் கணிதப்படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு கிரகங்களுடன் தொடர்பு இருக்கிறது. 1 என்ற எண் சூரிய கிரகத்துடன் தொடர்புடையது. 2 என்ற எண் சந்திரனுடன் தொடர்புடையது. 3 என்ற குரு பகவானுடன் தொடர்புடையது. 21 நாள் விரத எண்ணை 2+1 = 3 என எடுத்துக்கொண்டால் முருகப்பெருமானின் அருளும், குரு பகவானின் ஆதிக்கமும் நமக்கு கிடைக்கும்.
ஒளி மயமான வாழ்க்கை வேண்டும் என விரும்பும் பக்தர்கள் 21 நாட்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் முருகர் நாம் வேண்டியதை அருள்புரிவார். குரு பகவானின் ஆதிக்கத்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
21 நாட்கள் விரதம் தொடங்கும் முறை
முருகனுக்கு விசேஷமான நாட்கள் - செவ்வாய், வியாழன், ஞாயிறு. திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு விரதம் தொடங்கிட தனித்தனி நாட்கள் உண்டு. உதாரணமாக திருணமத்திற்காக விரதம் கடைபிடிப்போர் ஞாயிற்றுக்கிழமை விரதத்தை தொடங்கலாம்.
திதி நாள் கணக்கு வைத்து விரதம் தொடங்க நினைக்கும் பக்தர்கள் சஷ்டி திதியில் ஆரம்பிப்பது சிறப்பு. கார்த்திகை நட்சத்திரத்தன்றும் விரதம் தொடங்கலாம். முருகப்பெருமானுக்கு விசேஷமான எந்த நாளிலும் நீங்கள் விரதம் தொடங்கலாம்.
மேலும் படிங்க சூரனை முருகப்பெருமான் வதம் செய்த "சூரசம்ஹார" வரலாறு
21 நாட்கள் முருகனுக்கு விரத முறை
- விரதம் தொடங்கும் நாளில் வீட்டின் அருகே உள்ள முருகர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு கையில் காப்பு கட்டி கொள்ளவும்.
- வீட்டில் முருகர் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அரளிப்பூ, மஞ்சள் நிற மலர்கள் அல்லது மல்லி பூ கொண்டு அர்ச்சனை செய்யவும்.
- முருனுக்கு நெய் வேத்தியமாக காய்ச்சிய பாலில் தேன் கலந்து வைக்கவும். வழிபாடு முடிந்த பிறகு நீங்கள் இதை பிரசாதமாக எடுத்துக் கொள்ளவும்.
- 21 நாட்களுக்கும் பட்டினியாக இருந்து விரதம் கடைபிடிப்பது சிரமமான காரியம். எனவே தினமும் ஒரு வேளை பட்டினியாக இருங்கள்.
- அசைவ உணவுகளை விரத காலத்தில் கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.
- காலை, மாலை என இரண்டு நேரங்களுக்கு குளிக்க வேண்டும்.
- காலையில் முருகர் படம் முன்பு அமர்ந்து என்ன தேவைக்காக விரதம் இருக்கிறீர்களோ அதை வேண்டிக் கொள்ளவும்.
- மாலையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அப்போது தொழில் வளர்ச்சிக்காக விரதம் இருந்தால் வேல் மாறல் படிக்கவும்.
இந்த 21 நாட்களிலும் உங்கள் மனதைப் பக்குவப்படுத்தி விரதம் கடைபிடித்தால் முருகப்பெருமானின் அருளைப் பெற்று மன நிம்மதியோடு வாழலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation