herzindagi
secret of making soft chapatis

பஞ்சுபோல மிருதுவான சப்பாத்தி சுடுவதற்கு இதுவே ரகசியம்!

சப்பாத்தி வர வரனு சாப்பிடும் போது கடினமாக உள்ளதா ? பஞ்சுபோல மிருதுவான சப்பாத்தி சுடுவதற்கு இந்த கட்டுரையில் பகிரப்பட்டுள்ள ரகசியத்தை பின்பற்றுங்க...
Editorial
Updated:- 2024-05-02, 07:23 IST

சமைக்கும் தாய்மார்களுக்கு சப்பாத்தி சுடுவது என்றாலே பிரச்சினை தான். சப்பாத்தி செய்தால் மென்மையாக வரவில்லை, கல் போல கடினமாக இருக்கிறது என்ற கவலை ஏற்படும். குறிப்பாக குழந்தைகள், வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இனி சப்பாத்தி செய்யவே கூடாது எனத் தோன்றும். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். உணவகங்களில் கிடைக்கும் சப்பாத்தி போல மென்மையாகவும், மிருதுவாகவும் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

soft chapati ingredients

மிருதுவான சப்பாத்தி செய்யத் தேவையானவை 

  • கோதுமை மாவு
  • தண்ணீர் 
  • உப்பு 
  • தயிர்
  • எண்ணெய்

சப்பாத்தி செய்முறை 

  • நீங்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் கோதுமை மாவு தரமானதாக இருக்க வேண்டும். இதுவே மென்மையான சப்பாத்தி செய்வதற்கான முதல் படி.
  • மூன்று கப் கோதுமை மாவு எடுத்து அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேருங்கள். 
  • அடுத்ததாக தேவையான அளவு உப்பு, மூன்று ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து மாவை பிசையவும்.
  • பயன்படுத்தும் கோதுமை மாவின் அளவை பொறுத்து தண்ணீர் தேவைப்படும். 
  • தேவைப்பட்டால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை பிசையலாம். 
  • கோதுமை மாவு ஒருசேர வந்தாலே போதும். நீண்ட நேரத்திற்கு அழுத்தும் கொத்து பிசைய வேண்டிய அவசியமில்லை.
  • தற்போது மாவை துணி போட்டு மூடி அரைமணி நேரத்திற்கு ஊற விடுங்கள். 
  • அரை மணி நேரத்தில் மாவு நன்றாக செட் ஆகி விடும். இப்போது கைகளில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து மாவை பிசையவும். மென்மையாக உணர முடியும்.
  • கொஞ்சம் மாவு தூவி இரண்டு நிமிடத்திற்கு அழுத்தம் கொடுத்து பிசையவும். 
  • இப்போது சின்ன சின்ன உருண்டையாக எடுத்து சப்பாத்தி மாவு பிசையலாம்.
  • லட்டு-ஐ விட சப்பாத்தி உருண்டை கொஞ்சம் அதிகமான சைஸில் எடுத்து உருட்டவும். நாம் பயன்படுத்திய அளவுகளில் 15 சப்பாத்தி வரை சுடலாம்.
  • பூரி கட்டையில் கொஞ்சமாக மாவு தூவி வட்ட வடிவத்திற்கு மாவை உருட்டவும். பூரி கட்டையில் மாவு ஒட்டுவது போல் இருந்தால் நீங்கள் இன்னுமும் கூட படவுர் மாவு தடவலாம்.
  • அடுத்ததாக உருட்டிய மாவை இரண்டு கைகளில் மாற்றி மாற்றி போடவும்.
  • சப்பாத்தி கல் சூடுபடுத்தி கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி போட்டு இரண்டு பக்கமும் முழுமையாக வேக வைக்கவும். இப்படி சப்பாத்தி மாவு தயாரித்தால் நீண்ட நேரத்திற்கு சப்பாத்தி மென்மையாக இருக்கும்.
  • எண்ணெய் பதிலாக நெய் கூட பயன்படுத்தலாம். இரண்டும் பயன்படுத்தாத பட்சத்தில் தீயை அதிகப்படுத்தி சப்பாத்தி சுடவும்.
  • எண்ணெய் தேய்க்காத சமயங்களில் சப்பாத்தி உப்பி வரும்.
  • சிலர் சப்பாத்தியை தட்டையாக தட்டி உருட்டாமல் முக்கோண வடிவில் மடித்து உருட்டுவார்கள். இந்த சப்பாத்தி வட்டமாக வராது.
  • இந்த டிப்ஸை பின்பற்றி சப்பாத்தி செய்தால் சாப்பிடும் போது இனிப்பு போல கரையும்.
Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com