பளபளப்பான சருமத்தை பெற விரும்புகிறீர்களா? உங்களின் பல சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஓர் எளிய பொருளாக பால் விளங்குகிறது. பல நூற்றாண்டுகளாக, சரும பராமரிப்புக்கான ஒரு பிரதான பொருளாக பால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கையான அழகுக்கான ஒரு சிறந்த தேர்வாக இருப்பதுடன், இது வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் லாக்டிக் அமிலம் ஆகியவற்றால் நிறைந்துள்ளது.
மேலும் படிக்க: Pimple home remedy: முகப்பருக்களால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த 5 வீட்டு வைத்திய முறையை பின்பற்றவும்
அந்த வகையில் காய்ச்சாத பாலை நமது சரும பராமரிப்பில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதற்காக பாலை கொண்டு ஐஸ் கட்டிகளை முதலில் உருவாக்க வேண்டும். அதன்படி, முதலில் ஒரு சுத்தமான ஐஸ் ட்ரேயை எடுத்து, அதில் காய்ச்சாத பாலை ஊற்ற வேண்டும். இதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் அல்லது தேன் சேர்க்கலாம். இவை இயற்கையான கிருமி நாசினியாக செயல்படும்.
இப்போது, ட்ரேயில் உள்ள பால் முழுவதும் ஐஸ் கட்டிகளாக மாறும் வரை ஃபிரிட்ஜில் வைக்கவும். இப்படி செய்தால் நமக்கான பால் ஐஸ் கட்டிகள் தயாராகி விடும். இனி தினமும் பால் ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் மெதுவாக தேய்க்கவும். இந்த முறையை பின்பற்றினால், இரண்டு வாரங்களில் உங்கள் சருமத்தில் நல்ல மாற்றத்தை உணரலாம். உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். இது கண்களுக்கு கீழே ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
இதனை பயன்படுத்துவதால் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். சரும துளைகள் பெரிதாக இருக்கும் போது, அவற்றில் அழுக்குகள் எளிதாக சேரும். பால் ஐஸ் கட்டிகள், உடனடியாக துளைகளை சுருக்கி, கண்ணாடி போன்ற பளபளப்பான தோற்றத்தை கொடுக்கிறது. இது முகப்பரு வராமல் தடுக்கிறது. கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. இது சருமத்தை வறண்டு போகாமல் பாதுகாக்கிறது. சருமத்தின் நிறத்தை ஒரே சீராக பராமரிக்க உதவுகிறது. இது சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தின் அறிகுறிகளை குறைக்கிறது. சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேண்டுமா? அரிசி தண்ணீரை இனி இப்படி யூஸ் பண்ணுங்க
பால் ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதற்கு முன், முகத்தை மென்மையான க்ளென்சர் கொண்டு சுத்தப்படுத்தவும். முகம் உலர்ந்த பின்பு ஐஸ் கட்டிகளை முகத்தில் தடவவும். இதனை நேரடியாக பயன்படுத்துவதற்கு சற்று தயக்கமாக இருந்தால், ஒரு மெல்லிய துணியில் நான்கு அல்லது ஐந்து ஐஸ் கட்டிகள் வைத்து, அதை முகத்தில் மெதுவாக தேய்க்கவும். இவ்வாறு தினமும் இரண்டு முறை, இரண்டு நிமிடங்கள் வரை முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
மேக்கப் போடுவதற்கு முன்பு கூட, இதை முகத்தில் தடவி கொள்ளலாம். இது ஒரு சிறந்த மேக்கப் பேஸ் (Makeup base) ஆக செயல்பட்டு, உங்கள் முகத்திற்கு இயற்கையான அழகை கொடுக்கும். உங்கள் சரும பராமரிப்பு முறையில் பால் ஐஸ் கட்டிகளை சேர்த்து, அதன் பலன்களை பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com