Mahashivratri Prasadam : மகா சிவராத்திரியில் சிவனுக்கு படைக்க வேண்டிய சிறப்பு பிராசதங்கள்

மகாசிவராத்திரியில் சிவபெருமானுக்கு படைக்க சிறப்பு பிரசாதங்கள், அதன் செய்முறை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

Mahashivratri Prasadam

அம்பிக்கைக்கு நவராத்திரி விழா எடுப்பது போல சிவபெருமானுக்கு சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி நாளில் பூஜையில் கலந்துகொள்ளும் முன் வீட்டில் சில உணவுகளை சமைத்து அதை சிவனுக்கு படைக்க வேண்டும். கோயிலில் அந்த உணவுகளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினால் சிவனின் அருளைப் பெற்று நம்முடைய சகல துன்பங்களும் விலகும்.

மார்ச் எட்டாம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்படும் நிலைக்கு அன்று கட்டாயமாக சிவனுக்கு படையிலிட வேண்டிய உணவுகள் உள்ளன. அவை காராமணி, வெள்ளை தட்டைப் பயிறு, காய்ந்த மொச்சை மூன்றும் சேர்த்து கலந்த பயிறும், பூரண கொழுக்கட்டை மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகும். மகா சிவராத்திரிக்கு கலந்த பயறு செய்து சுண்டல் தாளிப்பது மிகவும் விஷேசமானது.

  • சிகப்பு காராமணி, வெள்ளை தட்டைப் பயிறு, காய்ந்த மொச்சை மூன்றையும் தனித் தனியே கால் கப் எடுத்து அதை தண்ணீரில் பத்து மணி நேரம் நன்கு ஊறவையுங்கள்.
  • குக்கரில் இந்த பயறுகளை போட்டு அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இரண்டு ஸ்பூன் உப்பு சேர்க்கவும்.
  • மூன்று விசிலில் பயறுகள் நன்கு வெந்துவிடும். இதன் பிறகு மிக்ஸியில் இரண்டு பச்சை மிளகாய், இஞ்சி கொஞ்சம், அரை டீஸ்பூன் சீரகம், அரை கப் தேங்காய் போட்டு பல்ஸ் மோடில் அரைக்கவும்.
  • அடுத்ததாக பேனில் ஒன்றரை எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஒன்னே கால் ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உடைத்த உளுந்தம் பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய் , கால் டீஸ்பூன் பெருங்காயம் , மிக்ஸியில் அரைத்த தேங்காய் விழுது, கறிவேப்பிலை, வேக வைத்த பயிறுகளை போட்டு தாளிக்கவும்.

பூரண கொழுக்கட்டை

  • சிவராத்திரி படையலில் பூரண கொழுக்கட்டை இடம்பெறுவது அவசியம்.
  • அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் இடியாப்ப பவுடர் எடுத்து அதில் உப்பு போட்டு நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • இதனிடையே அரை லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு அதில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
  • கொதிக்கும் தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சம் ஊற்றி சப்பாத்தி திருப்பும் கட்டை பயன்படுத்தி பிசையவும். அதிகபட்சமாக ஒன்னே கால் கப் தண்ணீர் ஊற்றலாம்.
  • பூரணம் தயாரிக்க மிக்ஸியில் பொட்டு கடலை கால் கப் போட்டு அரைக்கவும்.
  • இனிப்புக்காக பேனில் ஒரு கப் அச்சு வெல்லத்தை நன்கு இடித்து போட்டு கால் கப் கால் கப் தண்ணீர் சேர்த்து மிதமாக சூடுபடுத்தி அழுக்கை வெளியேற்றலாம்.
  • அடுப்பை ஆஃப் செய்த பிறகு வெல்லத்தை வடிகட்டி ஒன்றரை கப் துருவிய தேங்காய் கலக்கலாம். அடுப்பில் மீண்டும் தீ வைத்து மிக்ஸியில் அரைத்த பொட்டு கடலை பொடியை மொத்தமாக சேர்க்கலாம்.
  • ஆறிய பிறகு பூரணம் கெட்டியாக தெரியும். இப்போது கையில் எண்ணெய் தடவி விரும்பிய சைஸில் கொழுக்கட்டை மாவு உருட்டி தேவையான அளவு பூரணம் வைக்கலாம்.
  • வேகும் போது வெல்லத்தின் பாகு வெளியே வராதபடி மூடவும். நாம் எடுத்துக்கொண்ட அளவுகளில் 15 கொழுக்கட்டை தயாரிக்கலாம்.
  • இட்டி அவிப்பது போல் இட்லி தட்டில் போட்டு வேக வைக்கவும். இதற்கு 12 நிமிடங்கள் வரை ஆகும்.

அதேபோல மகா சிவராத்திரிக்கு சர்க்கரைவள்ளி கிழங்கு விஷேசமானது. இதன் செய்முறை எளிதே குக்கரில் அரை கிலோ சர்க்கரைவள்ளி கிழங்குடன் உப்பு சேர்த்து மூன்று விசிலுக்கு வேக வைக்கவும்.

இறுதியாக வாழை இலையில் இவை மூன்றையும் வைத்து ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்களையும் சேர்த்து சிவனுக்கு படையல் போடவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP