பெரும்பாலானவர்கள் பேக்கரி சார்ந்த உணவுகளில் வெண்ணெய், வெள்ளை சர்க்கரை மற்றும் மைதா பயன்படுத்தப்படுகிறது. இவை இல்லாமல் பேக்கிங் சாத்தியமா? கண்டிப்பா சாத்தியமே! இது போன்ற விஷயங்கள் எதுவும் சேர்க்காமல் ஆரோக்கியமான விஷயங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு அற்புதமான பிரவுனி ரெசிபியை இன்று இப்பதிவில் பார்க்க போகிறோம்.
உணவில் சேர்க்கப்படும் விஷயங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மைதா, வெள்ளை சர்க்கரை போன்ற விஷயங்களை பெரும்பாலானவர்கள் தவிர்ப்பது பாராட்டுக்குரிய விஷயம். சிறு வயது முதலே ஆரோக்கியமான உணவுகள் பற்றிய புரிதலை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: வாய் மற்றும் வயிற்றுப் புண்களை ஆற்றும் மணத்தக்காளி கீரை தோசை
சுண்டல், பழங்கள் போன்ற ஆரோக்கியமான விஷயங்களை சிற்றுண்டிகளாக கொடுத்தாலும், ஒரு சில நாட்களில் குழந்தைகள் பிரவுனி சாப்பிட விருப்பம் தெரிவிக்கலாம். இந்நிலையில் அதை ஆரோக்கியமான முறையில் நீங்களே வீட்டில் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியமான முறையில் பிரவுனி செய்ய பின்வரும் ரெசிபியை பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு (அல்லது) கோதுமை மாவு ½ கப்
- உப்பு - ஒரு சிட்டிகை
- பால் - 250 மில்லி
- கொக்கோ பவுடர் -⅓ கப்
- நாட்டுசர்க்கரை - ⅓ கப்
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்

செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ளவும்.
- இப்போது ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து சூடாக்கவும். பால் கொதித்தவுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும்.
- அடுத்ததாக கோகோ பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
- இதனுடன் நான்கு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- சூடாக இருக்கும் இந்த சாக்லேட் சிரப்பை கோதுமை மாவு கலவையுடன் சேர்த்து கிளறவும்.
- இந்த மாவு கேக் மாவை விட சற்று கட்டியாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் இதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தென்னிந்திய சுவையில் காரசாரமான மசாலா பாஸ்தா ரெசிபி
பேக் செய்யும் முறை
- ஒரு கடாயில் ஸ்டாண்ட் வைத்து, மூடி போட்டு 5 நிமிடம் ஃப்ரீ ஹிட் செய்து கொள்ளவும்.
- கடாய் சூடாகும் வேளையில் ஒரு பேக்கிங் ட்ரே அல்லது அகலமான கிண்ணத்தில் எண்ணெய் அல்லது நெய் தடவவும்.
- இப்போது தயாராக வைத்துள்ள பிரௌனி மாவை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, சமமாக பரப்பி விடவும்.
- நீங்கள் விரும்பினால் இதன் மீது சாக்லேட் சிப்ஸ் அல்லது துருவிய நட்ஸ் வகைகளையும் சேர்க்கலாம்.
- இப்போது கடாயை கவனமாக திறந்து, பேக்கிங் ட்ரேயை ஸ்டாண்ட் மீது வைத்து மூடி போட்டு வேக விடவும்.
- நீங்கள் பயன்படுத்திய ட்ரே அல்லது கிண்ணத்தின் அளவைப் பொறுத்து வேகும் நேரம் மாறுபடலாம்.
- 30-40 நிமிடங்கள் இடைவெளியில் ஒரு டூத் பிக்கை கொண்டு பிரவுனி முழுமையாக வெந்து விட்டதா என்பதை சரி பார்க்கவும்.
- டூத் பிக்கில் மாவு ஏதும் ஒட்டாமல் வந்தால் பிரவுனி தயாராகி விட்டது என்று அர்த்தம்.
- இப்போது அடுப்பை அணைத்து பிரவுனியை ஆறவிடவும்.
- பொறுக்கக்கூடிய சூட்டிற்கு வந்த பிறகு உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் பிரவுனியை வெட்டி பரிமாறலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation