herzindagi
image

ஆடிப்பூரம் 2025 : குழந்தை பாக்கியம் தரும் வளையல் மாலை வழிபாடு

ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து நலங்கு வைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம், திருமண கனவு நினைவாகும். ஆடிப்பூரத்தில் அம்மனை வழிபடுவதற்கு உகந்த நேரம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2025-07-26, 16:22 IST

உமாதேவியார் அவதரித்த நாளாகவும், அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்ட நாளாகவும், உலகிற்கே அன்னையாக விளங்க கூடிய ஆண்டாள் நாச்சியாரின் அவதார நாளாக சொல்லப்படுவது ஆடி மாதத்தின் பூர நட்சத்திரம். இதுவே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்து அம்மன் கோயில்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாக கொண்டாடப்படும். கல்யாண வரன் அமைய காத்திருக்கும் ஆண், பெண் மற்றும் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிக்கு ஆடிப்பூரம் முக்கியமானது. ஆடிப்பூரத்தில் (பூர நட்சத்திர நாள்) அம்மனை குறிப்பிட்ட முறையில் வழிபாடு செய்தால் கேட்டது கிடைக்கும். திருமண தடை நீங்கிட, குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்போர் அம்மனுக்கு தவறாமல் குறிப்பிட்ட வழிபாட்டை செய்யவும். அம்மனை சர்வ லோக ஜெகன்மாதா என்றழைக்கிறோம். அதன்படி அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து வளைகாப்பு நடத்தி நலங்கிட்டால் நாம் வேண்டியதெல்லாம் கிடைக்கும். 

ஆடிப்பூரம் நாள் 

2025 ஜூலை 27ஆம் தேதி மாலை 6.55 மணிக்கு பூர நட்சத்திரம் தொடங்கி 28ஆம் தேதி இரவு 8 மணி வரை பூர நட்சத்திரம் தொடர்கிறது. அதன்படி 28ஆம் தேதி ஆடிப்பூரம் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 

ஆடிப்பூரம் வழிபாடு நேரம்

28ஆம் தேதி காலை 6 மணி முதல் காலை 7.20 மணி வரை 
காலை 9 மணி தொடங்கி காலை 9.20 மணி வரை இரண்டு நல்ல நேரங்கள் இருக்கின்றன.

ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு

மரப்பலகையை வீட்டின் நடுவே கொண்டு வந்து தண்ணீர் தெளித்து கோலமிடுங்கள். அதன் பிறகு சிகப்பு பட்டு துணியை விரித்து அம்மனின் திருவுருப்படத்டை வைக்கவும். எந்தவொரு அம்மனின் படத்தையும் பயன்படுத்தலாம். இப்போது அம்மன் படத்திற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர் அலங்காரம் செய்து வளையலை மாலையாக கோர்த்து கட்டிவிடவும். நெய் வேத்தியமாக பழங்களை வைக்கலாம். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் திருப்புகழ் படியுங்கள். அதன் பிறகு அம்மனுக்கு திருஷ்டி சுத்துங்கள். இதை முடித்தவுடன் அம்மனின் படத்தை பூஜை அறையிலேயே வைக்கவும்.  இப்போது அதே பலகையில் குழந்தை பாக்கியம் கிடைக்க காத்திருக்கும் பெண்ணுக்கு அம்மனின் வளையல் மாலையை அணிவித்து சுமங்கலிகளால் மலர் அர்ச்சனை செய்ய சொல்லுங்கள். நீங்கள் கோயிலுக்கு சென்று அங்கு வரும் பெண்களுக்கு வளையல் வாங்கியும் கொடுக்கலாம்.

மேலும் படிங்க  ஆடி அமாவாசை 2025 : பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம், படையலிடும் முறை

திருமண வரன் வேண்டுவோர் வளையல் மாலை பதிலாக நலங்கு மட்டும் வைத்து வழிபாட்டை நிறைவு செய்யவும். இதோடு அபிராமி அந்தாதி படிப்பதும் சிறப்பு. இந்த வழிபாட்டை முறையாக செய்தால் அடுத்தாண்டு ஆடிப்பூரத்திற்குள் வேண்டுதல் நிறைவேறி இருக்கும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com