Aloe Vera Juice : வீட்டிலேயே கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி?

உடலுக்கு நன்மை தரும் கற்றாழை ஜூஸை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்து குடிக்கலாம் இதற்கான ரெசிபி இதோ…

easy aloe vera juice recipe at home

சருமம் மற்றும் உடல் நலத்திற்கு கற்றாழை ஏராளமான நன்மைகளை தரும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கற்றாழை ஜூஸ் குடிக்கலாம். ஒரு சில கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜூஸ் சுத்தமாக இருப்பதில்லை. ஆகையால் போதுமானவரை உணவுகளையும், இது போன்ற ஆரோக்கிய பானங்களையும் வீட்டிலேயே தயார் செய்வது நல்லது.

கற்றாழை ஜூஸின் செய்முறையை அறிய வேண்டுமா? இப்பதிவை முழுவதும் படியுங்கள். இனி நீங்களும் வீட்டிலேயே சுலபமாக கற்றாழை ஜூஸ் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

making aloe vera juice at home

  • கற்றாழை இலை - 1
  • தண்ணீர் - 1 கப்
  • சர்க்கரை - தேவையான அளவு
  • லெமன் ஜூஸ் - 1-2 டீஸ்பூன்

செய்முறை

home made aloevera juice

  • கற்றாழை மடலின் செடியில் இருந்து பறித்த பிறகு, சிறிது நேரம் வைத்தால் அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் வெளியேறும். இதை தவறாமல் செய்யவும்.
  • கற்றாழை இலையின் ஓரங்களை வெட்டி, நடுவே உள்ள கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். இதை செய்வதற்கு ஸ்பூனை பயன்படுத்தலாம்.
  • கற்றாழை ஜெல்லை ஒரு மிக்சர் ஜாரில் சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர், சர்க்கரை மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • லெமன் ஜூஸ் சேர்ப்பதை தவிர்க்க வேண்டாம்.
  • இப்போது தயாராக உள்ள கற்றாழை ஜூஸை ஃபிரஷ்ஷாக குடித்து மகிழுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையா? இந்த ஸ்மூத்திகளை ட்ரை பண்ணுங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP