herzindagi
image

ஆரோக்கியமான சுவையான வாழைப்பழ அல்வா; வீட்டில் செய்து பாருங்க ஈஸி ரெசிபி இதோ

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான அல்வா செய்முறைகள் இருந்தாலும், வாழைப்பழம் வைத்து செய்யும் இந்த வாழைப்பழ அல்வா மிகவும் எளிமையானது. அந்த வரிசையில் இந்த கட்டுரையில் நாம் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து எப்படி சுவையான, ஆரோக்கியமான வாழைப்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-05-20, 19:06 IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒரு சூப்பர் இனிப்பு அல்வா. இந்தியாவின் பாரம்பரிய இனிப்புகளில் மிகவும் பிரபலமான இந்த அல்வாவை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். தமிழ்நாட்டில் பல்வேறு வகையான அல்வா செய்முறைகள் இருந்தாலும், வாழைப்பழம் வைத்து செய்யும் இந்த வாழைப்பழ அல்வா மிகவும் எளிமையானது. அந்த வரிசையில் இந்த கட்டுரையில் நாம் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து எப்படி சுவையான, ஆரோக்கியமான வாழைப்பழ அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான வாழைப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

 

  • பழுத்த வாழைப்பழம் - 3
  • ஏலக்காய் பொடி - ½ டீஸ்பூன்
  • டால்டா அல்லது வெண்ணெய் - 4-6 டீஸ்பூன்
  • நெய் - 3 டீஸ்பூன்
  • வெல்லம் - 1 கப்
  • பனைவெல்லம் - ¼ கப்
  • முந்திரிப்பருப்பு - 5-6 (வறுத்து)

வாழைப்பழம் அல்வா செய்முறை:

chocolate-banana-halwa-recipe-a-rich-and-fruity-treat-for-hanuman-jayanti-feature

  • டால்டாவை பொன்னிறமாக்குதல்: ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் மிதமான தீயில் டால்டாவை விடுங்கள். இது பொன்னிறமாக மாறும் வரை கிளறவும்.
  • வாழைப்பழத்தை மசித்தல்: வாழைப்பழங்களை தோலுரித்து, கையால் நன்றாக மசித்து பழம் நாரின்றி மென்மையாக ஆக்கவும்.
  • அல்வா கலவையை தயாரித்தல்: பொன்னிறமான டால்டாவில் மசித்த வாழைப்பழத்தை சேர்த்து கிளறவும். ஏலக்காய் பொடியை தூவி நன்றாக கலக்கவும்.

  • வெல்லப்பாகு தயாரித்தல்: வேறொரு பாத்திரத்தில் வெல்லம், பனைவெல்லம் மற்றும் 1 கப் தண்ணீரை சேர்த்து மிதமான தீயில் பாகு போல காய்ச்சவும்.
  • அனைத்தையும் கலக்க வேண்டும்: தயாரித்த வெல்லப்பாகை வாழைப்பழ கலவையோடு சேர்த்து, கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறி விடுங்கள். இதற்கு பிறகு நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பை இதன் மேலே தூவி கலக்கவும். அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ அல்வா தயார்.
  • பரிமாறும் முறை: இந்த அல்வாவை மாலை நேர சிற்றுண்டியாக தேநீர் அல்லது பாலுடன் சேர்த்து பரிமாறலாம். இது சூடாக இருக்கும் போதே பரிமாறினால் சுவை அதிகமாக இருக்கும்.

இந்த எளிய செய்முறையை பின்பற்றி நீங்களும் வீட்டிலேயே சுவையான, ஆரோகியமான வாழைப்பழ அல்வாவை தயாரித்து ருசித்து பாருங்கள். 

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com