Dark Chocolate Paniyaram: குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் பணியாரம் செய்வது எப்படி?

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் டார்க் சாக்லேட் பணியாரம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

ebabbdeabbedcbda ()

குழந்தைகளுக்கு பொதுவாகவே சாக்லேட் சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனால் குழந்தைகளுக்கு தினமும் சாக்லேட் சாப்பிட கொடுக்க முடியாது. அப்படி சாக்லேட் சாப்பிட கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி இருமல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில நேரத்தில் இது அவர்கள் உடலுக்கு சில நோய்களை கூட ஏற்படுத்தலாம். இருந்தாலும் சாக்லேட்டை குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்காமல் அதில் ஒரு புதிய வகை ஸ்வீட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வரிசையில் டார்க் சாக்லேட் வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். உங்கள் வீட்டில் பால் முட்டை நாட்டு சர்க்கரை மற்றும் டார்க் சாக்லேட் இருந்தால் போதும் இந்த பணியாரத்தை ஈசியாக செய்து கொடுக்கலாம்.

டார்க் சாக்லேட் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

  • போர்பன் பிஸ்கட் பாக்கெட் 3
  • 100 மில்லி லிட்டர் பால்
  • நாட்டு சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்
  • நெய் 2 டேபிள் ஸ்பூன்
  • பேக்கிங் சோடா கால் டேபிள் ஸ்பூன்
  • முட்டை இரண்டு
  • டார்க் சாக்லேட் 1

சுவையான சாக்லேட் பணியாரம் செய்முறை:

maxresdefault () ()

முதலில் நாம் எடுத்து வைத்த போர்பன் பிஸ்கட்டை எடுத்து அதில் இருக்கும் கிரீமை தனியாக எடுத்து வைக்க வேண்டும். இப்போது இந்த கிரீமை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும். இதில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளலாம். இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை இதனை தேவையான அளவு பால் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். இந்த சாக்லேட் கலந்த பாலில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். முட்டை சேர்த்து சமைக்கும் போது பணியாரம் நன்றாக சாஃப்ட்டாக வரும்.

இதற்குப் பிறகு நாம் தயார் செய்த சாக்லேட் கலவையுடன் ஒரு சிறிய டார்க் சாக்லேட் சேர்த்து உருண்டைகளாக பிடித்து குட்டி குட்டி சாக்லேட் லட்டு போல செய்து வைக்க வேண்டும். இதனை அடுத்து ஒரு பணியாரக் கல்லில் நெய் ஊற்றி இந்த சாக்லேட் கலவை சேர்த்து வேக வைக்க வேண்டும். சுமார் ஐந்து முதல் பத்து நிமிடம் கழித்து பணியாரம் திருப்புவது போல இதனை திருப்பி எடுக்க வேண்டும். குறிப்பாக அடுப்பை குறைந்த தீயில் வைத்து பணியாரம் செய்தால் நன்றாக சுவையாக இருக்கும். இரு பக்கமும் நன்றாக வெந்த பிறகு தனியாக எடுத்து வைத்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான டார்க் சாக்லேட் பணியாரம் தயார். இப்போது சாக்லேட் பணியாரம் கேக் போல உள்ளிருக்கும் சாக்லேட் உருண்டைகள் உருகி நாம் சாப்பிடும் போது சாக்லேட் லாவா போல வெளியே வழிந்து வரும். இதனை பார்க்கும் போதே சாப்பிட தூண்டும். கண்டிப்பாக இந்த சாக்லேட் பணியாரத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP