herzindagi
image

நடைபயிற்சி செல்வதற்கு உகந்த நேரம் எது ? காலையா அல்லது மாலையா, சாப்பிட்டவுடன் நடைபயிற்சி போகலாமா ?

உடல்நலனுக்கு நடைபயிற்சி செல்வது மிக முக்கியம். எனினும் எந்த நேரத்தில் நடைபயிற்சி செல்வது நல்லது ? காலையா அல்லது மாலையா, சாப்பிடும் முன்பாக நடைபயிற்சி செல்ல வேண்டுமா அல்லது சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செல்லணுமா போன்ற கேள்விகளுக்கு இந்த பதிவில் விடை காணுங்கள்.
Editorial
Updated:- 2025-07-16, 14:44 IST

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செல்வது நல்லது. அதிகரித்த உடல் எடை, உடல் பருமனால் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க மருத்துவர்கள் நம்மை நடைபயிற்சி செல்ல அறிவுறுத்துவர். எந்தவித உபகரணும் இன்றி செய்யக்கூடிய பயிற்சி நடைபயிற்சி மட்டுமே. நடைபயிற்சி செல்வதில் பல நன்மைகள் இருக்கின்றன. நடைபயிற்சி செல்வதால் உடலில் இரத்த சர்க்கரை அளவுகளை குறையும், இதய ஆரோக்கியம் மேம்படும். நடைபயிற்சியில் செல்லும் தூரத்தை விட எந்த நேரத்தில் நடக்கிறோம் ? சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு ? என்பது முக்கியம்.

morning vs evening walk

சாப்பிடுவதற்கு முன்பு நடைபயிற்சி

காலை நேரத்தில் சாப்பிடுபதற்கு முன்பாக நடைபயிற்சி செல்வது உடலில் கொழுப்பை எரிக்கும். அந்த நேரத்தில் வயிறு காலியாக இருக்கும் என்பதால் நடைபயிற்சிக்கான ஆற்றலை உடல் கொழுப்பில் இருந்து பெறப்படும். தொடர்ச்சியாக காலையில் நடைபயிற்சி செல்லும் போது எடை குறையும். இந்த காரணத்திற்காக காலை நேரத்தில் சாப்பிடும் முன்பாக நடைபயிற்சி செல்லுங்கள்.

காலை நேரத்தில் நடைபயிற்சி

உடல்நலனை காட்டிலும் நடைபயிற்சி செல்வது மனத் தெளிவை அளிக்கும். மதிய உணவு சாப்பிடும் அரைமணி நேரத்திற்கு முன்பாக நடைபயிற்சி செல்வது உங்களுடைய கவனத்தை அதிகரிக்கும். பத்து நிமிடங்கள் நடந்தால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். மேலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி ?

சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செல்வது செரிமானத்திற்கு உதவும். வயிற்றில் ஏற்படும் அசைவு உணவை செரிமான அமைப்பில் எளிதில் கடக்க செய்யும். இதன் காரணமாக வயிறு உப்புசம், மலச்சிக்கல், நெஞ்சு எரிச்சலுக்கு ஆளாக மாட்டீர்கள். அதிகமாக சாப்பிட்டு அசெளகரியமாக உணர்ந்தால் நடைபயிற்சி செல்லலாம்.

காலை அல்லது மாலை நேர நடைபயிற்சி

காலையில் வெறும் வயிற்றில் நடைபயிற்சி சென்றால் உடலில் கொழுப்பு குறையும். சூரிய வெளிச்சத்தில் நடப்பது மெலடோனின் உற்பத்தியை ஊக்குவித்து இரவு நேரத்தில் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். இரவு நேரத்தில் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செல்வது இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தும். இரவு நேரத்தில் நடைபயிற்சி சென்றவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சாப்பிடுவதற்கு முன்பாக நடைபயிற்சி சென்றால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு எரிக்கப்படும். சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி சென்றால் உடலில் இன்சுலின் அளவு சீராகி கொழுப்பு தேக்கம் தவிர்க்கப்படும். நடைபயிற்சியின் மூலம் அதிக எடை குறைக்க விரும்பினால் வாரத்தின் ஏழு நாட்களிலும் தவறாமல் நடைபயிற்சி செல்ல வேண்டும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com