மாதவிடாய் காலத்தில் செக்ஸ் செய்வது சரியா ? கருத்தரிக்க வாய்ப்பு உண்டா ?

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மனநலன் மாற்றம் (மூட் ஸ்விங்) அடிக்கடி ஏற்படும். இதில் பலராலும் கேட்கப்படாத பொதுவான கேள்வி ஒன்று உள்ளது. மாதவிடாயின் போது செக்ஸ் செய்வது சரியா அல்லது ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ? மருத்துவரின் தகவல் பெற்று இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
image

மாதவிடாய் காலத்தில் செக்ஸ் செய்வது சரியா ? மாதவிடாய் நேரத்தில் செக்ஸ் செய்தால் கருத்தரிக்க வாய்ப்பு உண்டா ? இல்லையா ? இந்த நேரத்தில் நெருக்கம் காட்டுவது சரியா போன்ற சில கேள்விகள் பெண்களின் மனதில் நிச்சயம் எழும். ஆனால் இதை யாரும் பெரிதாக பேசுவதில்லை. இதற்கான விடையை தெரிந்துகொள்வதில் கூட பெண்கள் ஆர்வம் காட்டுவதில்லை. விடை தேடும் பெண்களுக்கு சரியான பதில்களும் கிடைப்பதில்லை. இந்த பதிவில் மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலை மருத்துவரின் ஆலோசனை பெற்று பகிர்ந்துள்ளோம்.

period sex right or wrong

மாதவிடாய் காலத்தில் செக்ஸ் செய்யலாமா ?

  • மருத்துவரின் தகவல்படி மாதவிடாயின் போது செக்ஸ் செய்வதில் எவ்வித தவறும் கிடையாது. இது பாதுகாப்பானதும் கூட.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கு செக்ஸ் உறவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. பிறப்புறுப்பில் ஈரப்பதத்தை உண்டாக்கும்.
  • மாதவிடாய் காலத்தில் செக்ஸ் செய்வதில் உடன்பாடா அல்லது அசெகரியமா என்பது உங்களையும் மற்றும் துணையின் எண்ணத்தை பொறுத்தது.
  • மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு மற்றும் பிடிப்பு ஏற்படும். இது மாதிரியான நேரங்களில் செக்ஸ் செய்வதை தவிர்த்திடுங்கள்.
  • அதிகளவு இரத்தப்போக்கு இல்லாத பட்சத்தில் சாதாரணமாக ஏற்படும் மாதவிடாய் சுழற்சியாக இருந்தால் செக்ஸ் செய்வதில் பிரச்னை கிடையாது.
  • மாதவிடாய் காலத்தில் நீங்கள் செக்ஸ் செய்தால் இருவரும் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழப்பமான எண்ணத்துடன் செக்ஸ் செய்வது அசெகளரியத்தை ஏற்படுவதோடு தூய்மையையும் கெடுக்கும்.
  • மாதவிடாய் காலத்தில் செக்ஸ் செய்தால் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை என பெண்கள் கருதுகின்றனர். ஆனால் இதில் உண்மையில்லை. மாதவிடய நேரத்தில் செக்ஸ் செய்ய விரும்பினால் கருத்தரித்தலை தவிர்க்க பாதுகாப்பான செக்ஸ் செய்யவும்.
  • பெண்ணின் பிறப்பிறுப்பு தொற்று, சிறுநீரக பாதையில் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. எனவே மாதவிடாய் காலத்தில் செக்ஸ் செய்வதாக இருந்தால் பாதுகாப்புடன் உறவில் ஈடுபடவும்.
  • மாதவிடாய் காலத்தில் செக்ஸ் செய்வதால் எண்டோர்பின் என்ற ஹார்மோன் ரிலீசாகும். இதன் காரணமாக பிடிப்பு குறைய வாய்ப்புண்டு.
  • இவை அனைத்தையும் விட இருவரின் செளகரியம் முக்கியமானதாகும்.
  • எந்த விஷயத்தை செய்யும் முன்பாக அதில் முழு உண்மையை தெரிந்துகொள்வது அவசியமாகும். நீங்கள் பல நாட்களாக சந்தேகம் கொண்டிருந்த விஷயத்தில் தெளிவான பதில்களை கொடுத்திருப்பதாக கருதுகிறோம்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP