
அன்றாட வாழ்க்கையில் உற்சாகத்துடனும், ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றால், ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசியமான ஒன்று. குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் சரிவிகித உணவை எடுத்துக்கொள்ளாவிடில், வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.
இதனால் உனக்காக சாப்பிடுகிறாயோ? இல்லையோ? வயிற்றில் வளரும் குழந்தைகளுக்காகக் கட்டாயம் சாப்பிட வேண்டும் என வீட்டில் உள்ள முதியர்கள் கூறுவார்கள். வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும் என்பார்கள். தவறும் பட்சத்தில் குழந்தைகள் எடை குறைவுடன் பிறப்பது முதல் மூளையின் வளர்ச்சி குறைவாக இருக்கும். மேலும் கண்கள் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் வரக்கூடும் எனவும் பிற்காலத்தில் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த சூழலில் கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பது குறித்த சில உணவுகளின் லிஸ்ட்டுகளைக் கர்ப்பிணி பெண்களுக்காக இங்கே பகிர்கிறோம்.

மேலும் படிக்க: ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்பது தெரியுமா?
இரும்புச் சத்து: வயிற்றில் வளரக்கூடிய குழந்தைகளுக்கு இரும்பு சத்துக்கள் அத்தியாவசியமான ஒன்று. மருத்துவர்களின் அறிவுரைகளின் படி, பிரசவ காலத்தில் குறைந்தது 5 மாதங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். கருவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது.
சுண்ணாம்பு சத்து: கர்ப்ப காலத்தில் பெண்கள் அதீத சோர்வுடன் இருப்பார்கள். கருவில் உள்ள குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடையும் போது, முதுகு வலி பிரச்சனையும் பெண்களைப் பாடாய்ப்படுத்திவிடும். இந்நேரத்தில் எலும்புகள் வலுவுடன் இருக்க பால், மத்தி மீன், தயிர், போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை இச்சத்துக்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில், மருத்துவர்களின் பரிந்துரையின் படி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி : கருவில் வளரும் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு வைட்டமின் டி அவசியம் தேவை. எனவே பால், மீன் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுப்பொருட்களைச் சாப்பிட வேண்டும். மேலும் கர்ப்ப காலத்தில் வைட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து பெறுவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு கர்ப்பிணிகள் வாக்கிங் செல்ல வேண்டும்.
மேலும் படிக்க: ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்ற மாதுளை ஜூஸை இந்த நபர்கள் குடிக்கக்கூடாது

புரத சத்துக்கள்: கருவில் வளரக்கூடிய சிசு நல்ல முறையில் வளர்ச்சிப் பெறுவதற்கும், மூளையின் செயல்திறன் திறம்ப செயல்படுவதற்கும் புரத சத்துள்ள உணவுகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் நாளொன்றுக்கு 60-100 கிராம் அளவிற்கு புரதச்சத்துள்ள மீன்,இறைச்சி, பீன்ஸ்,சீஸ், பால், நட்ஸ் வகைகள் மற்றும் பருப்புகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com