மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டுமா? தினமும் காலையில் இத பின்பற்றுங்கள்!

காலை நேரத்தை மகிழ்ச்சியாக்கிக் கொண்டால், நாள் முழுவதும் சந்தோஷமாகவும், ரிஸாக்ஸாகவும் இருக்க முடியும்.

reduce stress in women life

மன அழுத்தம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்களைக் கொல்லக்கூடிய கொடிய நோய்களில் ஒன்று. ஆம் மனத்தில் ஏதேனும் குழப்பங்கள், பயம் இருந்தால் எந்த வேலையையும் முறையாக செய்ய முடியாது. அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற இயந்திர வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் இலவசமாக கிடைக்கும் பரிசு என்று தான் கூற வேண்டும்.

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அதுவும் காலை நேரத்தை மகிழ்ச்சியாக்கிக் கொண்டால், நாள் முழுவதும் சந்தோஷமாகவும், ரிஸாக்ஸாகவும் இருக்க முடியும். இதோ எப்படி காலை நேரத்தை மகிழ்வாக்கிக் கொள்வது என்பதற்கான சில டிப்ஸ்கள் உங்களுக்காக.

psychological stress

மேலும் படிக்க:ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்களின் ஆளுமைப் பண்புகள் மற்றும் குணாதிசயங்கள்!

மன அழுத்தம் இல்லாத காலை நேரம்:

தியானம் மேற்கொள்ளுதல்:

relieve stress

ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் தொடங்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று தியானம். எத்தனையோ தடைகளைத் தாண்டி பயணிக்கும் போது நிச்சயம் மன அழுத்தம் ஏற்படும். எனவே காலை வேளையைத் தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 15- 20 நிமிடங்கள் கட்டாயம் தியானம் மேற்கொள்ள வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தும். மேலும் கடினமாக வேலை ஒன்றைச் செய்வதற்கு முன்னதாக நீண்ட மூச்சை இழுத்து விடவும். தியானமும் சுவாசப் பயிற்சியும் உங்களது நாளை மன அழுத்தம் இன்றி வைக்க உதவியாக இருக்கும்.

அதிகாலை எழுதல்:

wake up early

காலையில் எவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கிறோமோ? அவ்வளவு சீக்கிரம் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்ய வேண்டும். எவ்வித பரபரப்பு இன்றியும் வேலைகளை சரியான நேரத்தில் பார்த்தாலே போதும். யாரிடமும் திட்டு வாங்க தேவையில்லை. இதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தையும் குறைக்க முடியும். மேலும் உங்களுக்கு மிகவும் பிடித்த டீ அல்லது காபி ஏதேனும் ஒன்றை பருகி நாளைத் தொடங்கவும்.

தண்ணீர் குடித்தல்:

drink more water

உடலில் நீர்ச்சத்துக்கள் குறையும் போது உடல் சோர்வும் தலைவலியும் ஏற்படும். எந்த வேலையையும் சரியான நேரத்தில் செய்ய முடியாமல் திணறுவீர்கள். எனவே எதையும் சாப்பிடுவதற்கு முன்னதாக உங்களது உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதோடு மட்டுமின்றி வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த எலுமிச்சை, சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

மேலும் படிக்க:அலுவலகத்தில் சக ஊழியருடன் பிரச்னையா ? தவிர்ப்பதற்கான சில வழிகள்...

பாசிடிவ் உறுதிமொழிகள்:

postive attitude

வாழ்க்கையில் மன அழுத்தம் இன்றி இருக்க வேண்டும் என்று நினைத்தால், எப்போது நேர்மறையான மனநிலையுடன் நாளை தொடங்க வேண்டும். எவ்வளவு சிரமமானப் பணிகளை நீங்கள் கையாள வேண்டும் என்று நினைத்தாலும் மிகவும் துணிவுடன் இருக்க வேண்டும். மேலும் “ எனது அனைத்துப் பணிகளையும் முடிப்பேன் அல்லது இன்றைக்கு நாள் எனக்கு சிறந்ததாகவே அமையும். அதை நான் அமைத்துக் கொள்வேன் என பாசிடிவ் உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP