அலுவலகத்தில் சக ஊழியருடன் பிரச்னையா ? தவிர்ப்பதற்கான சில வழிகள்...

பணியிடத்தில் சக ஊழியருடன் பிரச்னை ஏற்பட்டால் அதை எவ்வாறு தீர்ப்பது ? மோதலாக வெடிக்காமல் எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.

dealing a conflict with coworker

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனை தொலைநோக்குடன் சிந்திக்க உதவினாலும் இன்னும் பலர் அற்ப விஷயங்களுக்கு சண்டையிட்டு கொள்கின்றனர். குறிப்பாக அலுவலங்கள் மற்றும் பணியிடங்களில் நடக்கும் பல பிரச்னைகளுக்கு ஒருங்கிணைப்பு இல்லாததே முக்கிய காரணம். பிரச்னைக்கு காரணமான சிலர் தனக்கும் அதற்கும் எவ்வித தொடர்பு இல்லாதது போல் நடிப்பது மற்றொரு பிரச்னைக்கு வழிவகுக்கிறது. சிறுவயதில் நம்முடைய பிரச்னைகளை பெற்றோரிடம் கூறும் போது துஷ்டனைக் கண்டால் தூர விலகு என அறிவுரை வழங்குவார்கள். அதன்படி பணி சூழலில் சக ஊழியர்களுடன் மோதல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான வழிகளை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

woman with brown hair brown eyes with clenched hands shouting angrily looking monitor office generative ai

பிரச்னையை ஒப்புக் கொள்ளுங்கள்

அலுவலங்களில் நடக்கும் பிரச்னைகள் மேலும் மேலும் வளர்வதற்கு அதை மூடி மறைப்பதும் ஒரு வித காரணமாகும். சக ஊழியருடன் பிரச்னை ஏற்பட்டால் நீங்களாகவே தீர்த்து விடலாம் என நினைக்காமல் உயர் அதிகாரியிடம் நடந்தவற்றை தெரிவியுங்கள்.

பிரச்னை குறித்த உரையாடல்

பிரச்னை நடக்கும் போது நம்மை அறியாமலேயே சில விஷயங்களை பேசி விடுவோம். எனவே நீங்கள் சண்டையிட்ட ஊழியரை தவிர்த்து மற்றவர்களுடன் உரையாடி உங்கள் பக்கம் ஏதும் தவறு உண்டா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பார்வை இருக்கும். ஆகவே நீங்கள் சரியாக தான் பேசினீர்களா என்பதை உரையாடி தெரிந்து கொள்வது அவசியம்.

பிரச்னையை விவரிக்கவும்

பிரச்னை குறித்து விவரிக்கவும் போது நடந்தவை அனைத்தையும் தெளிவாக கூறுங்கள். இதில் உங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக நினைத்து பிரச்னையை அரைகுறையாக விவரிப்பது தவறு. எப்போதும் ஒரு பிரச்னையை பேசியே தீர்க்க முடியும்.

பிரச்னைகளை விரைந்து தீர்க்கவும்

சக ஊழியருடன் ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்துவிட்டு அடுத்த வேலைக்கு செல்லவும். ஏனெனில் அந்த நாள் முழுவதும் உங்கள் பணி பாதிப்படைய வாய்ப்புண்டு. பிரச்னையை பொருட்படுத்த தவறினால் நாளடைவில் அது உங்களுக்கு எதிராகவே திரும்பக் கூடும்.

நேர்மையை கடைபிடியுங்கள்

நீங்கள் செய்தது சரி என உணர்ந்தால் நேர்மை தவறாதீர்கள். நேர்மையாக இருந்தால் பிரச்னை மீதான உரையாடல் வரும் போது நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

தீர்வுக்கு உடன்படுங்கள்

பிரச்னை குறித்து உயர் அதிகாரி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் அதை தீர்வாக நினைத்து உடன்படுங்கள். இதனால் பிரச்னை பெரிதாகாது. யாருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் பிரச்னையை அத்துடன் முடித்துவிட்டு உங்கள் வேலையில் கவனம் செலுத்த தொடங்குங்கள்.

குழு ஒருங்கிணைப்பு

வேலை செய்யும் இடத்தில் நம்முடைய பிரச்னை மற்ற ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என உணருங்கள். குழுவாக ஒருங்கிணைந்து வேலையை முடித்தால் ஊழியர்களிடையே புரிதல் உண்டாகி பிரச்னைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் நேர்மறையான சூழல் அமைவதற்கு குழு ஒருங்கிணைப்பு அவசியம்.

மேற்கண்ட விஷயங்களை பின்பற்றினால் அலுவலங்கள், பணியிடங்களில் சிறு சிறு பிரச்னைகள் மோதலாக வெடிப்பதை தவிர்க்க முடியும். ஒரு சிலர் மட்டும் இதையெல்லாம் தெரிந்து கொண்டே பிறருக்கு பிரச்னையை உண்டாக்குவார்கள். பெற்றோரின் அறிவுரை போல் துஷ்டனைக் கண்டு தூர விலகி இருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP