
இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம், காதல் திருமணம் எதுவாக இருந்தாலும் ஜோடிகள் அவசரப்பட்டு விவாகரத்து முடிவை எடுத்துவிடுகின்றனர். திருமணம் ஆன ஆறு மாத ஜோடி முதல் 30 வருட தம்பதி கூட அதிருப்தியை வெளிப்படுத்தி விவாகரத்து பெறுகின்றனர். விவாகரத்து முடிவு தனிப்பட்ட விஷயம் என்றாலும் கருத்தில் கொள்ள வேண்டிய ஆறு முக்கிய விஷயங்கள் இந்த பதிவில் பகிரப்பட்டுள்ளது.

தனிப்பட்ட முறையில் விவாகரத்து முடிவை எடுத்தாலும் அதைப் பற்றி திருமணம் செய்த துணையிடம் பேச வேண்டும். சமீபத்திய ஆய்வில் விவாகரத்து பெற விரும்பும் நபர்களில் 30 விழுக்காடு பேர் மட்டுமே துணையிடம் அது தொடர்பாக உரையாடியது தெரிய வந்துள்ளது. விவாகரத்து விஷயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் உண்மையை பேசினால் அதை சரி செய்வதற்கான வாய்ப்பு இருவருக்கும் ஏற்படும்.
திருமண வாழ்க்கையை தொடங்கியதில் இருந்து இருவரின் பங்களிப்பை யோசிக்க வேண்டும். வீடு முதல் நிதி விஷயங்கள் வரை ஒருவர் மீது மற்றொருவரின் எதிர்பார்ப்பை பகிர்தல் அவசியம்.
திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் முடிவுக்கு கொண்டு வர நினைத்தால் துணையின் மீதான அன்பு, காதல் உங்களிடத்தில் குறைந்திருக்க வேண்டும். ஒருவரை விட்டு விலகிச் செல்வது பயனளிக்கும் என்றால் விவகாரத்து முடிவை தொடரலாம். அன்பு, காதல் தொடர்ந்தால் அந்த உறவை இழப்பது நல்லதல்ல. விவாகரத்து முடிவுக்கு பல காரணங்கள் இருக்கலாம். எனினும் அதை சரி செய்ய முடியுமா என்பதை சிந்திந்து பாருங்கள்.
விவாகரத்து பெற நினைத்தாலும் எதோ ஒரு விஷயம் உங்களை வருத்தமடையச் செய்யக்கூடும் அல்லது பயத்தை ஏற்படுத்தும். மீண்டும் தனி மரமாக ஆகிவிடுவோமோ என பயம் இருந்தால் விவாகரத்து முடிவில் ஆலோசனை பெறவும்.
பல முயற்சிகள் மேற்கொண்ட பிறகும் விவாகரத்து முடிவை தொடர்வது சரி. ஆனால் குழந்தைகளுக்கு சிறந்த பெற்றோராக இருக்க விரும்பினால் அவர்கள் நலன் கருதி இருவரும் சேர்ந்து வாழ்வது நல்லது. விவாகரத்து முடிவு உங்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளையும் பாதிக்கும். விவாகரத்து விஷயத்தில் இருவரும் குழந்தையை ஆயுதமாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
விவாகரத்து முடிவை தொடரும் பட்சத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதி ஆதாரத்தை உறுதி செய்யவும். மாதாந்திர செலவுகளுக்கு நீதிமன்றம் மூலமாக ஜீவனாம்சம் பெற்றாலும் இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்க நிதி ஆதாரத்தை உறுதி செய்யவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com