12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. மூன்று முக்கிய நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என நம்பிக்கை. கும்பமேளாவில் எப்போதுமே கோடிக்கணக்கான மக்கள் திரள்வார்கள். இம்முறை உலககெங்கிலும் இருந்து 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் யாராவது ஒருவர் காணாமல் போனால் தேடி கண்டுபிடிப்பது சிரமமான காரியம். ஆனால் லட்சக்கணக்கான மக்களுக்கு நடுவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் முறை குறிஞ்சி பூ போல் தோன்றிய மோனலிசா என்பவர் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறார். யார் இந்த மோனலிசா வாருங்கள் பார்க்கலாம்.
கும்பமேளாவில் மோனலிசா
ராஜஸ்தானை சேர்ந்தவரான மோனலிசா ருத்ராட்சம், பாசிமணி விற்பதற்காக கும்பமேளாவில் குடும்பத்தினரோடு கடை போட்டுள்ளார். இந்தியர்களுக்கே உரிய நிறத்தில் அழகான புருவங்கள் கலையான புன்னகை முகத்தோடு காட்சியளிக்கும் மோனலிசா அங்கு வருகை தந்தவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இன்றைய உலகில் மேக்கப் போடாத இளம் பெண்களை காண்பது அரிது. இதில் மோனாலிசாவுக்கு விலக்கு அளித்துவிடலாம் என அவரை நேரில் கண்டவர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். மோனலிசாவின் புகைப்படத்திற்கு இணையத்தில் ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்தன.
மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பா ?
ஒரு சிலர் மோனலிசாவிடம் ருத்ராட்சம் வாங்குவதை தவிர்த்து அவருடன் பேசி பழக முயன்றுள்ளனர். தனக்கு வியாபாரம் நடந்தால் போதும் என மோனலிசாவும் பேச்சுகொடுத்துள்ளார். நாளுக்கு நாள் கும்பமேளாவில் மோனலிசா இருக்கும் இடத்தை பலரும் தேடியுள்ளனர். மோனலிசா பிரபலம் அடைவதை தெரிந்து சில வடநாட்டு ஊடகங்களுக்கும் அவரிடம் பேட்டி எடுத்துள்ளனர். சில நாட்களிலேயே அவரை இன்ஸ்டாவில் பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்துள்ளது. மோனலிசாவை புகைப்படத்தை பதிவிடும் பலரும் பிரபல இயக்குநர்களை டேக் செய்து சினிமாவில் வாய்ப்பு அளிக்கும்படி கோரிக்கையும் விடுக்கின்றனர்.
மேலும் படிங்கஹரியானா தேர்தல் : ஜுலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வெற்றி! எம்.எல்.ஏ ஆகிறார்
இன்னும் சிலர் அவரிடம் அத்துமீறி உள்ளனர். இதனால் அவர் விரைவில் ராஜஸ்தான் திரும்பக்கூடும் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் உலகப்புகழ் பெற்ற மோனலிசாவின் ஓவியத்திற்கு இணையாக ருத்ராட்ஷ மோனலிசா உருவெடுத்துவிடுவார் என்றே தோன்றுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation