மாதவிடாய் நாட்களில் எந்த ஆடைகள் அணிய வேண்டும்? எந்த நிறங்கள் அணியக்கூடாது தெரியுமா?

மாதவிடாய்க்காலத்தில் ஆடை மற்றும் நிறத் தேர்வுகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றன. எனவே, மென்மையான, சுவாசிக்கும் தன்மை கொண்ட துணிகளால் செய்யப்பட்ட ஆடைகளையும், அமைதியான நிறங்களையும் தேர்வு செய்வது நல்லது.
image

பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் என்பது இயற்கையான ஒரு செயல்முறையாக இருந்தாலும், பலருக்கு இது வலி மற்றும் சிரமங்கள் நிறைந்த காலமாக அமைகிறது. இந்தக் காலத்தில் உடல் வெப்பம், வயிற்றுவலி, உடல் வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால், ஆடைத் தேர்வில் கவனம் செலுத்துவது முக்கியமாகிறது. ஒரு சில பெண்கள் இந்த மாதவிடாய் காலத்தில் உடுத்தும் உடைகளில் கருப்பு நீளம் போன்ற டார்க் நிறங்கள் அணிய அதிகம் விரும்புவார்கள். காரணம் ரத்தப்போக்கு கரை வெளித்தெரியாமல் இருக்க உதவும். சரியான ஆடை மற்றும் நிறத் தேர்வுகள் மாதவிடாய் சிரமங்களைக் குறைக்க உதவும். அந்த வரிசையில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் எந்த விதமான ஆடைகள் மற்றும் எந்த விதமான நிறங்களில் ஆடை அணிய வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

வசதியான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?


மாதவிடாய்க்காலத்தில் உடல் உணர்திறன் அதிகரிப்பதால், இறுக்கமான ஆடைகள் அணிவது வயிற்று வலியை அதிகப்படுத்தும். எனவே, தளர்வான, மென்மையான மற்றும் சுவாசிக்கும் தன்மை கொண்ட ஆடைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

periods pain

மாதவிடாய் நாட்களில் பரிந்துரைக்கப்படும் ஆடைகள்:

  • காட்டன் (பருத்தி) குர்த்தா அல்லது டிரஸ் - இது உடலில் வியர்வை உறிஞ்சி தோல் எரிச்சலைத் தடுக்கும்.
  • லூஸ் ஃபிட் பாவாடை அல்லது பேண்ட் - வயிற்று அழுத்தத்தைக் குறைக்கும்.
  • எளிதில் அணியக்கூடிய உள்ளாடைகள் - சுகமான உணர்வைத் தரும்.

மாதவிடாய் நாட்களில் தவிர்க்க வேண்டிய ஆடைகள்:

  • இறுக்கமான ஜீன்ஸ் அல்லது லெக்கிங்ஸ் – வயிற்று வலியை அதிகரிக்கும்.
  • சின்தெடிக் துணிகள் - ஈரப்பதத்தை அதிகரித்து தோல் எரிச்சலை ஏற்படுத்தும்.

நிறங்கள் முக்கியம்:


நாம் அணியும் உடைகளின் நிறங்கள் மனதின் மீது தாக்கம் ஏற்படுத்துகின்றன. மாதவிடாய்க்காலத்தில் அமைதியான மற்றும் ஆறுதல் தரும் நிறங்களை தேர்ந்தெடுப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

மேலும் படிக்க: கருப்பை நீர்க்கட்டிகளை இயற்க்கை முறையில் கரைக்க; இந்த 4 மூலிகைகள் உதவும்

பரிந்துரைக்கப்படும் நிறங்கள்:

  • வெள்ளை/பேஸ்டல் நிறங்கள் - தூய்மையான உணர்வைத் தரும்.
  • நீலம்/பச்சை - மனதை அமைதிப்படுத்தும்.
  • கருப்பு/சாம்பல் - கறை படிவதைக் குறைக்கும்.


தவிர்க்க வேண்டிய நிறங்கள் என்ன?

  • சிவப்பு - மன அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
  • ஊதா/இளஞ்சிவப்பு - உணர்ச்சிகளைத் தூண்டலாம்.

periods time

உள்ளாடைகளின் தேர்வு:


மாதவிடாய்க்காலத்தில் பருத்தி உள்ளாடைகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இவை ஈரப்பதத்தை உறிஞ்சி தோல் எரிச்சலைத் தடுக்கும். மேலும், வசதியான அளவிலான உள்ளாடைகளை அணிவது நல்லது.

இந்த நிலையில் மாதவிடாய்க்காலத்தில் ஆடை மற்றும் நிறத் தேர்வுகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றன. எனவே, மென்மையான, சுவாசிக்கும் தன்மை கொண்ட துணிகளால் செய்யப்பட்ட ஆடைகளையும், அமைதியான நிறங்களையும் தேர்வு செய்வது நல்லது. இந்த சிறிய மாற்றங்கள் உங்களுக்கு மாதவிடாய்க்கால சிரமங்களைக் குறைக்க உதவும். எனவே உங்களுக்கு வசதியான மற்றும் ஆரோக்கியமான ஆடை மற்றும் நிறத் தேர்வுகளை செய்யுங்கள். எப்போதும் உடல் நலத்தை முன்னிலைப்படுத்தி ஆடை அணியுங்கள்.

Image source: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP