அக்னி நட்சத்திரம் தொடரும் நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து மக்களின் மனங்களை குளிர்வித்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும் வரும் நாட்களிலும் மழை தொடரவே அதிக வாய்ப்புள்ளது. அடுத்த சில தினங்களுக்கான தமிழக வானிலை நிலவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழக வானிலை நிலவரம் - மே 17 டூ மே 20
மே 17ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 18ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 19ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 20ஆம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கண்ட நாட்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள் : மே 17 டூ மே 20
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
தென்மேற்கு வங்கக்கடலில் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
மே 18 முதல் மே 20 வரை கர்நாடக - கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிங்கTN Budget 2025 : சென்னைக்கு அருகே புதிய நகரம் முதல் புற்றுநோய் தடுப்பூசி வரை; தமிழக பட்ஜெட்டின் 10 சிறப்பம்சங்கள்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation