2025-26 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மார்ச் 14ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். தமிழ் வளர்ச்சி, பள்ளி கல்வி, உயர்கல்வி, தொழிலாளர் நலன், மகளிர் நலன், குழந்தை நலன், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி, மருத்துவ துறை, விளையாட்டு துறை என பலவற்றுக்கு நிதியும் ஒதுக்கப்படு புதிய திட்டங்களும் அறிவிப்பட்டன. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்வதை பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டினார். விவசாய துறைக்கு தனி பட்ஜெட் மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக பட்ஜெட் 2025
- திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும் 35 உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 45 பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்ட 193 உலக நாடுகளிலும் அனைத்து அலுவல் மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும். திருக்குறள் மொழிபெயர்ப்பு திட்டத்திற்கு 133 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய நூல்களை உலக மொழிகளில் கொண்டு செல்ல 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 2025-26 நிதியாண்டில் 6 ஆயிரத்து 100 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமச் சாலைகள் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
- புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 26 ஆயிரத்து 678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னைக்கு மிக அருகே புதிய நகரம் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். உலகத்தர வசதிகளுடன் கூடிய புதிய நகரத்தை உருவாக்கிட முதற்கட்டப் பணிகளை டிட்கோ நிறுவனம் விரைவில் தொடங்கும்.
- 2025-26 நிதியாண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இவற்றுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் வழங்கப்படவுள்ளது. பெற்றோரை இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு மாதந்தோறும் 18 வயது வரை 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
- காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பில் தோழி விடுதிகள் கட்டப்படும். சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில் 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மாணவியர் விடுதி அமைக்கப்படும். உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
- மும்மொழி கொள்கையை ஏற்காத காரணத்தினால் மத்திய அரசு 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை வழங்காத போதிலும் மாநில அரசு மாணவர்களின் கல்விக்காக சொந்த நிதி ஆதாரங்களை விடுவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பல்வி கல்வித்துறைக்கு 46 ஆயிரத்து 767 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகம் விரும்பி தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவுகளில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் வரும் கல்வி ஆண்டில் தொடங்கப்படும்.
- தமிழகத்தில் சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டினை சேர்த்திட உடற்கல்விப் பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றியமைக்கப்படும். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் தமிழக வீரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒட்டுமொத்தமான விளையாட்டு துறைக்கு 572 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பெண்களை பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயை தடுத்திய 14 வயதை கடந்த அனைத்து பெண் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த 2025-26 நிதி ஆண்டில் 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிங்கBudget 2025 : வருமான வரி விலக்கு முதல் ரூ.2 கோடி கடன் வரை; பட்ஜெட்டின் டாப் 10 சிறப்பம்சங்கள்
Live: TN Budget 2025 - 2026 #TNBugdet2025 #எல்லார்க்கும்எல்லாம் https://t.co/boByQoBFAW
— Thangam Thenarasu (@TThenarasu) March 14, 2025
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation