herzindagi
monsoon baby care tips

நெருங்கும் மழைக்காலம்; குழந்தைகளைப் பாதுகாக்கும் முறைகள்!

<span style="text-align: justify;">மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு சூக்கள் போட வேண்டாம். ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.</span>
Editorial
Updated:- 2024-07-16, 21:27 IST

சுட்டெரிக்கும் வெயில் எப்போது போகும்? கோடைக்கால சரும பிரச்சனைகளை எப்போதும் இல்லாமல் செய்யப் போகிறோம்? என்ற நினைக்கும் போதே நமக்கு ஒரு வரமாக வருகிறது பருவமழை. தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் ஆங்காங்கே சாரல் மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்கிறது. என்ன தான் இதமான சூழலை இந்த பருவ மழைக் கொடுத்தாலும் கூடவே பல உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகிறது.

இந்த காலத்தில் பெரியவர்களை விட குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. ஆம் மழைக்காலம் என்றாலே பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணியால் பல நோய் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற பருவ கால நோய்த் தாக்குதலும் ஏற்படும் என்பதால் எப்போதும் எச்சரிக்கையுடன் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

baby care in monsoon days

 மேலும் படிக்க: மழைக்கால நோய் தொற்றுகளில் இருந்து விடுபட  இந்த ஒரு கஷாயம் போதும்- இப்படி சாப்பிடுங்க.!

மழைக்காலத்தில் குழந்தைப் பராமரிப்பு:

  • மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் கொசு விரட்டி கிரீம்களை மட்டும் பயன்படுத்தவும். ஏனென்றால் சில குழந்தைகளுக்கு தோல் அழற்சி பாதிப்புகள் ஏற்படும்.
  • குழந்தைகள் விளையாடுவதற்காக அல்லது ட்யூசன் செல்வதற்காக மாலை நேரங்களில் வெளியில் செல்லும் போது முழு கை சட்டை மற்றும் முழு நீள பேண்ட் அணிய வைக்கவும். கொசுக்கள் அதிகம் கடிப்பதைத் தவிரக்க முடியும். இரவில் தூங்கும் போது கொசு வலைகளைப் பயன்படுத்துவது நல்லது.
  • மழைக்காலங்களில் குழந்தைகளுக்க உணவுகள் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றுப் போக்கு மற்றும் டைபாய்டு போன்ற  நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே எப்போதும் குழந்தைகளுக்கு வடிகட்டிய நீர் மற்றும் சூடான தண்ணீரை அருந்த சொல்லுவது நல்லது.
  • குழந்தைகளுக்காக சமைக்கும் உணவுகளை எப்போதும் மூடி வைக்கவும். இல்லையென்றால் கிருமிகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறிவிடும்.  சமைப்பதற்கு முன்னதாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உப்பு தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின்னதாக சமைக்க வேண்டும்.
  • மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை பிரச்சனைகள், இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், குழந்தைகளுக்கு சூடான உணவுகள், காய்கறி சூப்கள் மற்றும் சூடான டீ போன்றவற்றைக் கொடுப்பது நல்லது.
  • நோய்த்தாக்குதலுக்கு குழந்தைகள் அதிகம் பாதிக்கக்கூடும் என்பதால், வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள். வீட்டிற்குள்ளேயே விளையாட அனுமதிக்கவும். பெற்றோர்களின் பேச்சை மீறியும் குழந்தைகள் விளையாட சென்றால் வீட்டிற்குள் வரும் போது ஆன்டிசெப்டிக் சோப்பைப் பயன்படுத்தி கைகளை நன்கு சுத்தம் செய்யவும்.
  • நொறுக்குத் தீனிகள்,சாலையோர உணவுகள் மற்றும் எண்ணெய் பலகாரங்களைக் குழந்தைகள் சாப்பிட அனுமதிக்காதீர்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும்.

monsoon take care special

 மேலும் படிக்க: மழைக்காலத்தில் வீட்டை துர்நாற்றம் வீசாமல் தூய்மையாக வைத்திருக்க இந்த டிப்ஸ் உதவும்

  • மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு சூக்கள் போட வேண்டாம். ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே மழை நேரங்களில் சாதாரண செப்பல் அணிய அனுமதிக்கவும்.

Image source - Google 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com