மன அழுத்தம், சலிப்பு, ஏதாவதொன்று ஆர்வம் அதிகமாக இருக்கும் போது குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளது. நரம்பு பழக்கம் என்று அழைக்கப்படும் இப்பிரச்சனை உள்ளவர்கள் மூக்கில் விரல் விட்டு நோண்டுவது, முடியை முறுக்குவது, பற்களைக் கடிப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள். என்ன தான் அடித்தாலும், திட்டினாலும் இந்த பழக்கத்தை விடுவது அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக அமையும்.
குறிப்பாக குழந்தைகளிடம் இந்த பழக்க வழக்கங்கள் அதிகமாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு முறையும் பெற்றோர்களிடம் திட்டு வாங்குவார்கள். ஆனாலும் அவர்களை மீறியும் பல நேரங்களில் இந்த செயல்பாடுகள் தொடரத் தான் செய்யும். இதனால் நகங்களில் உள்ள அழுக்குகள் வயிற்றுக்குள் சென்று பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் ஒவ்வொரு பெற்றோர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதற்காக குழந்தைகளை அடிக்கவும், திட்டவும் வேண்டாம். மாறாக அவர்களைத் திருந்துவதற்கு இந்த வழிமுறைகளை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
நகங்களைக் கடிப்பதை நிறுத்தும் முறை:
குழந்தைகளுக்கு விரல்களில் நகம் இருந்தால் தான் கடிப்பார்கள். எனவே நகங்கள் கொஞ்சம் வளர்ந்தவுடன் அவற்றை வெட்டி விடுவது நல்லது. இது குழந்தையின் நகங்களைக் கடிக்கும் பழக்கத்தைக் குறைப்பதற்கு ஒரு வழியாக அமையும். வாழ்க்கையில் சலிப்பு மற்றும் தனிமையில் இருக்கும் போது நகங்களைக் கடிக்கும் பழக்கம் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எனவே எப்பொழுதும் குழந்தைகளைப் பிஸியாக வைத்திருக்க முயற்சி செய்யவும். ஓவியம், நடனம், வெளிப்புற மற்றும் உட்புற விளையாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் நகம் கடிக்கும் குழந்தைகளின் எண்ணத்தை மாற்ற முடியும். மேலும் புதிய திறமைகளைக் கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும். மேலும் நகம் கடிப்பதால் என்னென்ன உடல் நலப்பாதிப்புகள் ஏற்படும்? என்பது குறித்து பொறுமையாக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும்.
வெகுமதி கொடுத்தல்:
உங்களது குழந்தைகளிடம் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும் போது, அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யவும். இதோடு நீங்கள் நகங்களை சிறிது நேரத்திற்கு கடிக்காமல் இருந்தால் கட்டாயம் உங்களுக்கு பரிசு கொடுப்போம் என்று கூறுங்கள். பொதுவாகவே குழந்தைகளிடம் போட்டி மனப்பான்மையும், எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கும் என்பதால் இந்த முறையை நீங்கள் முயற்சி செய்யலாம்.
சைகைகள் செய்தல்:
குழந்தைகள் தங்களது நகங்களைக் கடிப்பதைப் பார்க்கும் போது அம்மாக்களுக்கு சட்டென்று கோபம் வரக்கூடும். எத்தனைத் தடவ சொல்லியும் கேட்கவே மாட்டயா? என அடித்துவிடும். அதீத கோபம் கூட குழந்தைகளின் நகம் கடிக்கும் பழக்கத்தை அதிகரிக்க செய்யும். எனவே நகங்களை குழந்தைகள் கடிப்பதைப் பார்த்தால், சைகை மொழியில் வேண்டாம் என்று கூறுங்கள். முகத்தில் கோபத்தைக் காட்டி வேண்டாம் என்று எச்சரிக்கை செய்ய முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க:குறைப்பிரசவ குழந்தைகளை வீட்டிலேயே பராமரிக்கும் முறை!
இதோடு குழந்தைகளின் நகங்களில் நெயில் பாலிஷ்களைப் போட்டு விடவும். ஒருவேளை கடித்தால் அழுக்குகள் வயிற்றுக்குள் போய்விடும் என எச்சரிக்கை செய்யுங்கள். நிச்சயம் இதுபோன்ற முறைகளைப் பின்பற்றினால் ஓரளவிற்கு நகம் கடிக்கும் பழக்கத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்வார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
Image source- Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation