தேர்வு நாட்கள் நெருங்கிவிட்டால் ஒவ்வொரு வீட்டிலும் கொஞ்சமாச்சு தேர்வு பயம் இருக்கா ?, நல்ல மதிப்பெண் வாங்கிவிட்டால் ராஜா போல வாழலாம் போன்ற வாசகங்களை பிள்ளைகளிடம் பெற்றோர் அடிக்கடி கூறுவது உண்டு. தேர்வு எழுதும் பிள்ளைகளை விட பெற்றோருக்கு இருமடங்கு அச்சம் வந்துவிடும். தனது பிள்ளை நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் ஆசை. 10, 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எப்போதுமே ஒருவிதமான அழுத்தம் இருக்கும். இதற்கு பெற்றோர் மட்டுமே உதவ முடியும். பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எவ்வாறு பெற்றோர் உதவலாம் என சில வழிகள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
குழந்தையின் திறன் அறியவும்
ஒவ்வொரு குழந்தையின் திறனுக்கும், திறமைக்கும் அளவுகோல் உண்டு. அவர்களுடைய சக்திக்கு மீறி எதையும் செய்ய கட்டாயப்படுத்தாதீர்கள். தேர்வில் இத்தனை மதிப்பெண்கள் கட்டாயமாக பெற்றே ஆக வேண்டும் என திணிக்காமல் முழு உழைப்பை போட்டு தேர்வை எழுதச் சொல்லுங்கள். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி சொல்வது போல செய்யும் செயல்கள் சரியான திசையில் இருந்தால் முடிவுகள் தானாக கிடைக்கும்.
குழந்தையின் அச்சம் போக்கவும்
பொதுத்தேர்வுக்கு தயாராகும் நேரத்தில் குழந்தையிடம் அச்ச உணர்வு ஏற்படுகிறதா ? மன அழுத்தம் உண்டாகிறதா என கவனிக்கவும். குழந்தையின் உடல்நலனை விட உலகில் வேறு எதுவும் முக்கியமில்லை. உடல்நல பாதிப்பு அல்லது தேர்வு பயம் எதுவாக இருந்தாலும் கண்காணித்து அவர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள். தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும் உன் மீதான அன்பு குறையாது என தெரிவிக்கவும்.
குழந்தையுடன் துணை நில்லுங்கள்
எப்போதுமே வீட்டில் வேலை இருந்து கொண்டே இருக்கும். எனினும் தேர்வுகாலத்தில் குழந்தைக்கென தனி நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள் உங்களிடம் ஆலோசனைகள் பெற விரும்பலாம், ஒப்புவிக்க நினைக்கலாம் அல்லது சந்தேகம் கேட்க விரும்பலாம். நீங்கள் வீட்டு வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்து அவர்கள் உதவி கேட்கலாமா ? கூடாதா என தயங்க கூடாது. தேர்வுநாட்களில் உறுதுணையாக இருக்கவும்.
மேலும் படிங்கபெண் பிள்ளைகளிடம் நீங்கள் சொல்லக்கூடாத விஷயங்கள்
குழந்தையின் கவனச்சிதறல்களை தடுக்கவும்
குழந்தை படிக்கும் நேரத்தில் கவனச்சிதற்லகளை தடுப்பது பெற்றோரின் பொறுப்பு. தேவையற்றை விஷயங்களை பேசி படிப்பில் இருந்து அவர்களுடைய கவனத்தை திசை திருப்பாதீர்கள். நீண்ட நேரம் படிக்கும் போது சோர்வு ஏற்படும். அதற்காக அவர்களை டிவி பார்க்கவும், செல்போன் உபயோகிக்கவும் அனுமதிக்காதீர்கள். தேர்வு நாட்களில் நேர்மறையான விஷயங்களை மட்டும் பேசவும்.
தேர்வுக்கான திட்டம்
தேர்வு அட்டவணை போட்டு அதற்கேற்ப குழந்தைகளை தயார் ஆக சொல்லுங்கள். உங்கள் குழந்தையுடன் அமர்ந்து எதை படித்து முடித்து இருக்கிறார்கள் ? இன்னும் எதை படிக்க வேண்டும் ? எதை மீண்டும் படித்து நினைவுப்படுத்த வேண்டும் என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். படிக்கும் பாடங்களை இரண்டு முறை எழுதி பார்க்க சொன்னால் அவர்களின் மனதில் அவை நன்கு பதிந்துவிடும். பதற்றம் இன்றி தேர்வை எழுதுவதற்கு குழந்தைகளை தயார்படுத்துங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation