குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் பொன்னான மற்றும் பொறுப்பான காலமாகும். அடித்தளம் வலுவாக அமைத்தால் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும். வேர்கள் வலுவாக அமைந்து சிறகுகள் வளர்ந்தால் மட்டுமே குழந்தைகளால் சமமாக பறக்க முடியும். குழந்தையிடம் பாலின சமத்துவத்தை கற்பிப்பது அவசியம். அதிலும் பெண் குழந்தை வளர்ப்பில் பொறுமையும், எச்சரிக்கையும் முக்கியம். பெண் குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பாலினத்தின் அடிப்படையில் வேலையை வகைப்படுத்தாதீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் பிடித்தமான வேலையை செய்ய வாய்ப்பளிக்க வேண்டும். பெண் குழந்தையிடம் நீ விண்வெளி, குத்துச்சண்டை வீராங்கனை ஆகலாம் என ஊக்கப்படுத்தி வளர்க்கவும். இது பாலின சமத்துவத்தை வலியுறுத்தும்.
எல்லா பெண்களும் மாடலிங் செய்பவர்கள் அல்ல. அவர்களுடைய உடல்
எடை குறித்து விமர்சிப்பது தவறு. உங்களுடைய பெண் குழந்தை எதை
சாப்பிட விரும்புகிறாளோ அதை அனுமதிக்கவும். அதேநேரம் ஆரோக்கியமான உணவு பழக்கம் குறித்தும் எடுத்துரையுங்கள். குண்டாக இருக்கிறாய் என கிண்டல் செய்து பெண் குழந்தையை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்.
பெண் குழந்தைகளிடம் இதை உன்னால் செய்ய முடியாது என அவர்களுடைய திறனை வீண் அடிக்காதீர்கள். இது பெற்றோர் செய்யும் பெரும் தவறாகும். பெண் குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் உள்ளது என தெரிந்து கொண்டு அதை ஊக்கப்படுத்தி கனவுகளை நோக்கி அனுமதிக்கவும். உன்னால் முடியாது எனக் கூறினால் அவர்களுடைய கனவு தடைபடும்.
பெண் பிள்ளை ஆண் போல் முடிவெட்டிக் கொண்டு ஜூன்ஸ், சட்டை அணிந்தால் அது குற்றம் கிடையாது. அவள் எதை அணிய விரும்புகிறாளோ அனுமதிக்கவும். மேக்கப் போட்டு தான் வெளியே வரவேண்டும் என கூறுவது அபத்தமானது.
மகளை உங்களோடு ஒப்பிடாதீர்கள். எதாவது தவறு செய்திருந்தால் அதை பற்றி பேசி மனிதர்கள் தவறு செய்வது இயல்பு என கூறப்படும். சரியான முடிவுகளை எடுக்க இது சரியான வயதல்ல என பேசாதீர்கள். அதற்கு பதிலாக அந்த தவறை சரி செய்திட ஆலோசனை வழங்கவும்.
உங்களுடைய மகளை மனம் விட்டு பேச அனுமதிக்கவும். இதில் தவறினால் பாலின ஒடுக்கத்திற்கு நீங்கள் துணை போவதாக அர்த்தம். பெண் பிள்ளைகள் தங்களுடைய விருப்பத்தை தெரிவிக்க உரிமை உண்டு.
ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் சிரிக்கலாம், பெண் பிள்ளைகளிடம் கட்டுப்பாடு தேவை என பேசாதீர்கள். இது காலம் காலமாக சமூகத்தில் உள்ள அவலம்.
எல்லா பெற்றோருமே அவர்களுடைய பெண் குழந்தையை ராணி போல் வளர்க்க விரும்புவார்கள். பெண் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள் எனினும் அவர்களின் பொறுப்புகளை சொல்லிக் கொடுக்கவும்.
மேலும் படிங்க பெண்களை ஈஸியா புரிஞ்சிக்கணுமா; இத்தனை வழிகள் உள்ளன
பெண் பிள்ளைகள் வீட்டிற்கு சரியான நேரத்தில் வரவில்லை என்றால் உங்களுக்கு கவலை இருக்கும். தாமதமான வருகைக்கு உரிய காரணத்தை மட்டும் கேளுங்கள். பெண் என்பதால் வீட்டிற்கு தாமதமாக வரக்கூடாது என்ற சட்டம் கிடையாது.
எல்லா விளையாட்டிலும் ஆண், பெண் பிரிவு உள்ளது. தனித்தனியே போட்டி விதிமுறைகளும் இருக்கின்றன. விளையாட்டில் பாலின பாகுபாடு காண்பிப்பது அவசியமில்லாதது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com