herzindagi
image

பெண்களை ஈஸியா புரிஞ்சிக்கணுமா; இத்தனை வழிகள் உள்ளன

பெண்களை புரிந்துகொண்டு பயணிப்பதில் ஆண்களுக்கு எப்போதுமே பிரச்னை தான். எவ்வளவு நாட்கள் உடன் இருந்தாலும் புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற எண்ணம் இருக்கும். பெண்களை புரிந்துகொள்வதற்கு சில வழிகள் உள்ளன.
Editorial
Updated:- 2024-11-30, 09:01 IST

பெண்களை புரிந்து கொள்ள நினைப்பது பல ஆண்களுக்கு மிக சவாலாக இருக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் அவர்கள் வேறுவிதமாக நினைப்பார்கள். இதனால் முரண்பாடுகள் மட்டுமே உண்டாகும். தில் படத்தில் பெண்களை புரிந்துகொள்வதற்கு விவேக் போல பெண்ணாக மாற தேவையில்லை. ஆண் என்ற மனநிலையில் இருந்து விடுத்து ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களின் எதிர்பார்ப்பு என்ன ? பெண்கள் எதை நினைக்கின்றனர் என்ற கேள்விகளுக்கு பதில் இருந்தாலே அவர்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம்.இதற்கு 10 எளிய வழிகள் உள்ளன.

பெண்களை புரிந்துகொள்வது எப்படி ?

ஒரு சிறிய புன்னகை, முக்கியமான தருணங்களில் கவனிப்பு, அரவணைப்பு ஆகியவற்றை மட்டுமே பெண்கள் பெரும்பாலும் எதிர்பார்க்கின்றனர். இவற்றை சரியாக செய்த பிறகுபுரிந்துகொள்வதில் சிரமம் உள்ளதென குற்றஞ்சாட்டலாம்.

பெண்கள் தங்களுக்கு தேவையான நேரங்களில் பொய் சொல்வார்கள். அந்த பொய் கேட்பதற்கு நன்றாகவும் இருக்கும். நீங்கள் விவரமான நபராக இருந்தால் பெண்கள் பொய் பேசும் தொனியை கண்டுபிடித்துவிடலாம். அதை சாதுர்யமாக சமாளிக்க முயற்சிப்பார்கள். அதற்காக நீங்கள் அவர்களை சந்தேகிக்க வேண்டிய அவசியமில்லை. அதே போல சில சமயம் பெண்கள் அன்பை வெளிப்படுத்துவதும் ஒரே மாதிரி இருக்கும். எது உண்மை என கண்டறியும் திறன் உங்களுக்குத் தேவை.

எல்லா பெண்கள் உங்கள் தாயை போல் இருப்பார்கள் என நினைக்காதீர்கள். எனவே வீட்டு விஷயங்களில் பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். தங்கள் வீட்டில் வாழ்ந்த குழந்தை பருவத்தைப் போலவே எங்கும் இருக்க நினைப்பார்கள். எனவே வீட்டு வேலைகளின் மொத்த சுமையையும் பெண்கள் மீது திணிக்காதீர்கள். அவ்வப்போது அவர்களிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

understand a women

மாதவிடாய் நேரத்தில் இருவரும் சண்டையிட்டு கொள்வதற்கு பெண்ணின் மனநிலையை காரணம் சொல்லாதீர்கள். சிலருக்கு அந்த நேரத்தில் சண்டையிட விருப்பம் கூட இருக்காது. சண்டையிடும் போது மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் மனநிலையை காரணமாக கூறாதீர்கள். இது எந்தவிதத்திலும் பயன் தராது. முடிந்தவரை அமைதி காக்கவும்.

ஆண்களுக்காக மட்டும் நன்றாகத் தோன்ற வேண்டும் என பெண்கள் நினைக்க மாட்டார்கள். செல்லும் இடத்தில் அனைவரையும் ஈர்க்க பெண்களின் கண்கள் விரும்பும். எனவே பெண்கள் அணியும் ஆடையில் குறை கூறாதீர்கள். ஆடை அணிவதில் பெண்களுக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி இருக்கும். இதில் ஒன்றை மட்டுமே நீங்கள் செய்ய முடியும். அவர்கள் மீது அதிக கவனம் செலுத்தினால் வேறு எங்கும் அவர்களது கவனம் திரும்பாது.

மேலும் படிங்க "ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மாறும் ஆண் மாறினால்" முற்போக்கான இந்தியாவை உருவாக்கிட ஆண்மையை மறுவரையறைத்தல் - பூனம் முத்ரேஜா

பெண்களின் அறையில் ஆங்காங்கே ஆடைகள் இருந்தால் மடித்து வைக்க தெரியாதா என்ற விமர்சனத்தை வைக்காதீர்கள்

தங்களுக்கென நேரம் செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெண்களிடத்தில் மனதில் இருக்கும். ஆண்களை போல பெண்களும் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். குழுவாக செல்ல விரும்பாமல் தனியாக செல்வதற்கும் விரும்புவார்கள். இதை ஆண்கள் ஏற்க மறுத்தாலும் பெண்களின் சாகச பயணங்களுக்கு தடை போட முடியாது.

பெண்களுக்கும் சில ஆண்கள் மீது விவரிக்க முடியாத ஈர்ப்பு இருக்கும். இதற்காக பெண்ணை விமர்சிக்க முடியாது. இது அவர்களுடைய தவறு அல்ல. அந்த ஆணின் ஆளுமை மற்றும் வசீகரம் பெண்களுக்கு பிடித்திருக்கலாம்.

ஒரு பெண் உங்களிடத்தில் செல்போன் எண் கொடுத்தால் நீங்கள் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்று அர்த்தம். நம்பர் வாங்கிய பிறகு ஒரு வாரம் தாமதித்தால் அதற்கான உரிய காரணத்தை சொல்லிவிடுங்கள். குறைந்தபட்சம் ஒரு மெசேஜ் அனுப்புங்கள் அல்லது அழைப்பு விடுக்கவும். இதை தவறினால் உங்களிடம் அடுத்தமுறை பேச யோசிப்பார்கள்

பெண்கள் தங்களுடைய உணவு பழக்கத்திலும், மது அருந்தும் சுதந்திரத்திலும் ஆண் தலையிடுவதை விரும்பமாட்டார்கள். அதிகளவு மதுகுடித்து சுயநினைவு இழக்கும் வரை தங்களை யாரும் கேள்வி கூடாது என நினைப்பார்கள். அதே போல அதிகளவில் சாப்பிட்டு உடல் எடை அதிகரித்தால் உங்களுக்கு என்ன கவலை என்ன நினைப்பார்கள். மேலும் உடல்எடையை வைத்து விமர்சிப்பதை
விரும்பமாட்டார்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com