மனம் அலைபாய்கிறதா? எந்த வேலையையும் செய்ய முடியவில்லையா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!

மனதை எப்போதும் அமைதியாகவும், ஒருநிலைப்படுத்த வேண்டும் என்றால் நினைவாற்றல் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். 

avoid wandering

இன்றைய விஞ்ஞான உலகத்தில் அனைவரும் அயராது உழைத்துத் தங்களுக்கானத் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். நாள் முழுவதும் மணிக்கணக்கில் வேலைப்பார்க்கும் நாம் நிம்மதியுடன் வாழ்கிறோமோ? என்றால் நிச்சயம் இருக்காது. குடும்ப சூழல், அலுவலகம், குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் என பலவற்றை நினைத்துக் கொண்டே மனம் அலைபாய்ந்துக் கொண்டே இருக்கும். நிம்மதியாகவும் இருக்க முடியாது. அருகில் சந்தோஷமான சூழல் இருந்தாலும் கூட நம்மால் எதையும் அனுபவிக்க முடியாமல் மனம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டே இருக்கும்.

இந்த அலைபாயும் மனதை ஒருநிலைப்படுத்தவும், வாழ்க்கையில் எவ்வித கஷ்டங்கள் இருந்தாலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், நிச்சயம் இந்த வழிமுறைகளைக் கட்டாயம் நீங்கள் பின்பற்ற வேண்டும். இதோ மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான சிம்பிள் டிப்ஸ் உங்களுக்காக.

happy women

அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

மேலும் படிக்க:குழந்தையை விரைவாக தூங்க வைக்கணுமா ? இந்த விஷயங்களை பின்பற்றுங்க

நினைவாற்றல்:

மனதை எப்போதும் அமைதியாகவும், ஒருநிலைப்படுத்த வேண்டும் என்றால் நினைவாற்றல் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் யோகாசனங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும் மூச்சுப் பயிற்சியை செய்யலாம். மூச்சை ஒருநிலைப்படுத்தி செய்யும் போது எவ்வித சிந்தனையும் உங்களுக்கு ஏற்படாது. இதோடு சரியாக செய்ய வேண்டும் என்ற யோசனை உங்களது நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.

இலக்குகள் நிறுவு:

வாழ்க்கையில் எந்த வேலைகளைச் செய்தாலும் மனதை ஒருநிலைப்படுத்தினால் மட்டுமே வெற்றிகரமாக முடிக்க முடியும். அதை செய்யத் தவறிவிட்டு என்னால் எதையும் சரியாக செய்ய முடியவில்லையே? என்று கவலைப்படக்கூடாது. அதற்கு மாறாக நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறீர்களோ? அதை எப்படி செய்ய வேண்டும்? எந்த நாளுக்குள் முடிக்க வேண்டும்? என்று ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இலக்கை முடிப்பதற்காக யோசிக்க நினைத்தாலே மனம் அலைபாயாது. இதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இடைவேளை எடுத்தல்:

ஒரே வேலையைத் தொடர்ச்சியாக செய்துக் கொண்டு இருக்கும் போது நிச்சயம் சளிப்பாகிவிடும். என்னடா? வாழ்க்கை என்ற விரக்தியும், ஏன் நமக்கு மட்டும் இந்த நிலை என்கிற விரக்தியும் ஏற்படும். இதுப்போன்ற மனநிலையைத் தவிர்க்க விரும்பினால் எந்த வேலைப்பார்த்தாலும் ஓய்வு என்பது அவசியம்.. இடைவேளை எடுத்து நீங்கள் பணியைச் செய்யும் போது மனம் அமைதிப்பெறும். அடுத்ததாக எந்தவொரு வேலையையும் அலைபாயாமல் விரைவாக செய்து முடிக்க உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க:மகளிருக்கான தகவல்! தமிழக அரசு செயல்படுத்தும் திருமண உதவித் திட்டம்... உடனடியாகப் பயன்பெறலாம்

women medidation

புலன்களைக் கட்டுப்படுத்துதல்:

ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி நம்முடைய பணிகளைத் தொடர்ச்சியாக செய்தாலே வாழ்க்கையில் வெற்றியை பெற முடியும். இதை செய்வது என்பது பெரும் மலை அல்ல. நாம் தான் நம்மைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். கண்கள் அங்கும் இங்கும் சிதறாமல் கவனத்தை ஒருநிலைப்படுத்தவும், முடிந்தவரை உங்களுக்கான வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற மனநிலை இருந்தாலே மனம் வேறு எங்கும் அலைபாயாது.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP