குழந்தையை விரைவாக தூங்க வைக்கணுமா ? இந்த விஷயங்களை பின்பற்றுங்க

குழந்தையை எப்படி தூங்க வைப்பது என புரியாமல் சிரமப்படுகிறீர்களா ? பெற்றோர்களே இந்த பதிவு உங்களுக்கானது.

how to sleep better for children

குழந்தைகளுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஒவ்வொரு வயதிலும் குழந்தைகள் எத்தனை மணி நேரம் தூங்குவது அவசியம், பகல் நேரத்தில் குழந்தைகள் எத்தனை மணி நேரம் தூங்கலாம் போன்ற சந்தேகங்கள் பலருக்கும் உண்டு. இதை விட பெற்றோருக்கு குழந்தையை தூங்க வைப்பதில் தலைவலியாக இருக்கும். இந்த பதிவில் குழந்தைகளுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம், ஒவ்வொரு வயதிலும் எத்தனை மணி நேர தூக்கம் அவசியம், போதுமான நேரம் தூங்கவில்லை என்றால் என்ன நடக்கும், குழந்தைகள் நன்றாக தூங்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ways to help your child fall asleep

குழந்தைகளுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் ?

காலையில் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளின் உடலில் இரவு நேரத்தில் பல்வேறு வகையான நிகழ்வுகள் நடக்கும். மூளையில் இருக்கும் நரம்புகளுக்கான செல்கள் வளரும். இரவு நேரத்தில் நன்றாக தூங்கினால் மட்டுமே காலையில் புத்துணர்வாக காணப்படுவார்கள். குழந்தைகளின் கவனம் அதிகரிக்கும். தசை பாதிப்புகள் சீர் செய்யப்படும் நேரமும் இரவே. உடல் உறுப்பு செயல்பாடுகள், உடல் எடையை சீராக வைத்திட குழந்தைகளுக்கு இரவு நேர தூக்கம் அவசியம்.

வயதிற்கு ஏற்ப தூங்கும் நேரம்?

பிறந்த குழந்தை முதல் மூன்று மாதங்களுக்கு குறைந்தபட்சம் 11 மணி நேரம் தூங்க வேண்டும். அதிகபட்சமாக 14-17 மணி நேரம் தூங்க பரிந்துரைக்கப்படுகிறது. நான்கு மாதத்தில் இருந்து ஒரு வயது வரை குறைந்தபட்சம் பத்து மணி நேரம் தூக்கமும் அதிகபட்சம் 12-15 மணி நேரம் தூங்க பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு வயதிலிருந்து இரண்டு வயது வரை குறைந்தது ஒன்பது மணி நேர தூக்கமும் அதிகபட்சம் 11- 14 மணி நேரம் தூக்கமும் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று வயது முதல் ஐந்து வயது வரை குறைந்தபட்சம் எட்டு மணி நேரமும் அதிகம்பட்சமாக பத்து-13 மணி நேரம் தூங்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஆறு வயதிற்கு பிறகு தினமும் எட்டு மணி நேர தூக்கம் அவசியமானது.

தூக்கத்தில் பாதிப்பு ?

குழந்தைகள் போதுமான நேரம் தூங்காத பட்சத்தில் வளர்ச்சி பாதிப்படையும், பகலில் தூங்கும் நிலை உண்டாகும், சோர்வாக உணர்வார்கள், எந்தவொரு விஷயத்தை முழுமையாக கற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும், பகலில் தூங்கி விழவும் வாய்ப்பு உண்டு.

குழந்தைகள் நன்றாக தூங்க என்ன செய்வது ?

பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை தூங்க வைக்க முடியாமல் திணறுகின்றனர். குழந்தையை தூங்க வைப்பதில் குறுக்குவழி கிடையாது. இதற்கு பெற்றோர் மூன்று விஷயங்களை செய்ய வேண்டும்.

  • குழந்தையை சரியான நேரத்தில் தூங்க வைப்பது.
  • குழந்தை தூங்குவதற்கு ஏதுவான சூழலை அமைத்து கொடுப்பது.
  • உரிய நேரத்தில் தாய்ப்பால் கொடுத்து குழந்தையை தூங்க வைப்பது.

சில குழந்தைகள் தாயின் தோளில் தூங்கிவிடுவார்கள். ஆனால் தொட்டிலுக்கு மாற்றும் போது விழித்துக் கொள்வார்கள். தாயின் உடலோடு ஒட்டி இருக்கும் போது குழந்தை கதகதப்பாக உணரும். தொட்டில் அல்லது கட்டிலுக்கு மாற்றும் போது கதகதப்பு இருக்காது. எனவே தொட்டில், கட்டிலுக்கு மாற்றும் போது குழந்தையின் அருகிலேயே சில நிமிடங்களுக்கு படுத்துக் கொண்டு அதன் பிறகு நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாம்.

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP