உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் தமிழ் புத்தாண்டை தினத்தை வரவேற்கின்றனர். தமிழ் நாள்காட்டியில் சித்திரை முதல் நாள் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு திருநாளை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். புத்தாடை அணிந்தும், இறை வழிபாடு மேற்கொண்டும் இத்திருநாளை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்ற இந்த நாளில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது? என்பது குறித்து இன்றைக்கு நாமும தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: தீரா சந்தோஷத்திற்கும் தித்திக்கும் வாழ்க்கைக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் ஆகும். இதைத் தான் ஆங்கில மாதமாக கணக்கிடப்பட்டு ஆங்கில புத்தாண்டுகளைக் கொண்டாடுகிறோம். இதே போன்று தான் தமிழ் புத்தாண்டு தினமும் கணக்கிடப்படுகிறது. ஆம் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கி மீன ராசியில் முடிவடைவதைத் தான் சித்திரை முதல் நாள் கணக்கிடப்படுகிறது.
மேலும் சித்திரை மாதத்தின் முதல் நாளாக ஏப்ரல் 14 ல் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணத்தில் கூறப்படுகிது. இதோடு மட்டுமின்றி சிவ பெருமான் ருத்ர தாண்டவம் ஆடி பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்திய நாளாகவும் இந்த நாள் பாரக்கப்படுகிறது. இவ்வாறு மக்களுக்கு புதிய விஷயங்களை வழங்கிய இந்நாளில் நாம் புதிய காரியங்களைத் தொடங்கும் போது, வாழ்வில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையோடு தமிழ் புத்தாண்டு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர்.
சித்திரை முதல் நாள் வரக்கூடிய தமிழ் புத்தாண்டு தினத்தை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். வீட்டிற்கு செல்வ செழிப்பு பெருக வேண்டும் என்ற நம்பிக்கையோடு, இத்திருநாளின் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்வதிலும், பழைய பொருள்களை அகற்றி புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காகக் காத்திருக்கின்றனர்.
வீடுகளில் மா, வேப்பிலை தோரணங்களும், முற்றத்தில் அரிசி மாவு கோலம் இட்டும் சித்திரை மாதத்தை மக்கள் வரவேற்கின்றனர். அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்தும் புத்தாடை உடுத்துவார்கள். மேலும் வீட்டு பூஜை அறையில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம் வைத்தும் தலை வாழை இலைப் போட்டும் இறை வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.
மேலும் படிக்க: மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது!
இதோடு மட்டுமின்றி அறுசுவை உணவுகளைப் படைத்து குடும்பத்துடன் கொண்டாடுகின்றனர். குறிப்பாக இந்தாளில் மொச்சை பயறு குழம்பு வைத்தும், இனிப்பும், கசம்பும் கலந்த வேப்பம்பூ வெல்லப் பச்சடி சமைக்கின்றனர்.வாழ்க்கையில் இனிப்பும், கசப்பும் சேர்ந்து வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த உணவுகளை சமைக்கின்றனர். மேலும் புத்தாடைகளும், உணவுகளும் ஆண்டு முழுவதும் கிடைக்க வேண்டும் என்ற பிராத்தனைகளோடு வழிபாடுகளை மக்கள் மேற்கொள்கிறார்கள்.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com