உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடம் முழுவதும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மாசி திருவிழா, ஐப்பசி திருவிழா என தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதில் மிக முக்கியமான பிரசித்தி பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ம் தேதி இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
மேலும் படிக்க: உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கால அட்டவணை!
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் கோவிலாகும். இந்த விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா இன்று காலை 9:55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது.
-சம்பந்தர் தேவாரம்
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்ககொடி மரத்தில் தர்ப்பை புற்களை வைத்து வெண்பட்டால் சுற்றப்பட்ட பிரமாண்டமான மாலை ஏற்றப்பட்டு மலர்கள் தூவி கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கோவில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன், மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் அறங்காவல்குழு நிர்வாகிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கொடி மரத்தின் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சிஅம்மன் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனா்.
கொடியேற்றப்படும் கொடிப்பட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ரிஷபம், தர்ம உருவாகவும், ஆத்மாவின் உருவாகவும் மதிக்கப்படுகிறது. ஆத்மாக்களையும், தர்மத்தையும் கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்லும் இறைவனின் கருணை இக்கொடியேற்றத் திருவிழாவில் விளக்கப்படுகிறது. பொதுவகையில் உயிர்களுக்கு அருள்புரியும் இறைவன், சிறப்பு வகையில் அருள்புரிய ஆயத்தமாக இப்பன்னிரண்டு நாட்களும் காத்திருக்கிறான் என்பதை இக்கொடியேற்றம் உணர்த்துகிறது.
முதல் நாள் திருவிழா, தூல தேகத்தை நீக்கிக் கொள்ளும் பயனை விளக்குவதாக அமையும். முதல் நாள் இரவு, சிவபெருமான் மரத்தடியில் வீற்றிருப்பதை விளக்கும் கற்பக விருட்ச வாகனம் எழுந்தருளும். இதை விருத்திக்கிரம சிருட்டிக் கோலம் என்பர். மரத்தின் கிளைகளும், இலைகளும் தத்துவங்களும், உயிர்வர்க்கங்களாகவும் உள்ளன. இவற்றின் அடியில் இறைவன் இருந்து, சிருட்டிக்கெல்லாம் வேர்போல் தாம் இருந்தருளுவதை இது உணர்த்துகின்றது
வெகு விமர்சையாக கொடியேற்ற நிகழ்வு நடைபெற்று முடிந்த பின்பு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை உடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதனைத் தொடர்ந்து இன்று இரவு ஏழு மணி அளவில் சுவாமியும் அம்பாலும் கற்பக விருட்சம் சிம்மம் வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இந்த கொடியேற்ற நிகழ்வில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடியேற்றுத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா இன்று தொடங்கி 12 நாட்கள் நாள்தோறும் காலை மற்றும் மாலைகளில் நான்கு மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளும் வீதி உலா நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்வாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 21ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 22ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது. இதன் தொடர்ச்சியாகசித்திரை திருவிராவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் 23ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் போது வைகை ஆற்றில் லட்சக்கணக்காண பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
image source:
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com