Women in Business: வீட்டில் இருந்தவாறு பெண்களும் சம்பாதிக்க முடியும்!

ஒரு தொழிலைத் தொடங்குவது பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை அடைவதற்கும், மிகவும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று.

business ideas list

பெண்களின் கையில் வருமானம் இருந்தால் குடும்பத்தில் எந்த சூழலையும் அசால்டாக எதிர்கொள்வார்கள். திருமணத்திற்கு முன்னதாக தங்களது குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளை நிறைவேற்றும் அளவிற்கு சம்பாதித்தாலும் திருமணத்திற்கு பின்னதாக அவர்களது வாழ்க்கையில் முற்றிலும் மாறிவிட்டது. 50 சதவீத பெண்கள் திருமணத்திற்கு பின்னதாக வீட்டில் இருந்து பணியாற்றக்கூடிய நிலை உள்ளதா? என்ற தேடலில் தான் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஏதாவது ஒரு வணிகத்தைத் தொடங்கலாம் என்ற யோசனையிலும் இருப்பார்கள். இவ்வாறு ஒரு தொழிலைத் தொடங்குவது பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை அடைவதற்கும், மிகவும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகவும் உள்ளது. இதோ இதுபோன்ற பெண்களுக்காகவே சிறந்த வணிக யோசனைகளை இங்கே பகிர்கிறோம்.

business trick for women

பெண்களுக்கான வணிக யோசனைகள்:

  • பெண்கள் பணிக்குச் சென்றால் அந்த வேலையைத் தவிர மற்ற வேலைகளைப் பார்க்க முடியாது. ஆனால் வீட்டில் இருந்தால் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதோடு, அவர்களின் வருமானத்திற்கு சில தொழில்களையும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே அமையும்.
  • பெண்களில் பலர் தங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று அதிக ஆசைப்படுவார்கள். எனவே வீட்டில் அழகுநிலையங்கள் தொடங்கலாம். ஆன்லைன் வாயிலாக பல அழகுசாதனக் குறிப்புகளை அப்லோடு செய்வதால் அதன் மூலமும் வருமானத்தைப் பெற முடியும்.
  • பெண்களுக்கான சுய தொழிலில் அடுத்தப்படியாக நிகழ்ச்சிகளை கையாளுதல் அதாவது Event management தொழிலைத் தொடங்கலாம். வீட்டில் இருந்தபடியே திருமண நிகழ்வுகள், பிறந்த நாள் போன்றவற்றிற்கு சாப்பாடு முதல் மண்டபம் வரை ஏற்பாடு செய்து தரக்கூடிய பணிகளை மேற்கொள்ளலாம். இது வீட்டில் இருந்தப்படியே சம்பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
  • வீட்டில் தயாரிக்கப்பட்ட பருப்பு பொடி, இட்லி பொடி, மசால் பொடி, வடகம், வத்தல் போன்றவற்றைத் தயாரித்து ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் விற்பனை செய்யலாம். கையில் கொஞ்சம் அதிகமாக பணம் இருந்தால் பெரிய அளவில் தொழிலாளர்களை வைத்து நீங்கள் உங்களது வணிகத்தைத் தொடங்கலாம்.
tailoring
  • பெண்களில் பலருக்கு தையில் நிச்சயமாக தெரிந்திருக்கும். இன்றைய பெண்கள் விரும்புவது போன்று ஆரி ஓர்க் மற்றும் விதமான மாடல்கள் ப்ளவுஸ் மற்றும் சுடிதார்களை தைக்கும் சிறு நிறுவனம் அமைக்கலாம்.
  • பெண்களுக்கு எழுதும் திறன் இருந்தால் பரீலான்ஸராகவும் உங்களது பணியை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம். சோசியல் மீடியாக்களில் மின் புத்தகங்கள் கூட எழுதலாம்.
  • புகைப்படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ள பெண்களாக இருந்தால், குடும்ப புகைப்படக் கலைஞராக மாறலாம். ஆண் புகைப்பட கலைஞர்களை விட இன்றைக்கு திருமணம் உள்ள சுப நிகழ்ச்சிகளில் பெண்களை புகைப்படம் எடுப்பதற்கு பெண் புகைப்பட கலைஞர்களைத் தான் விரும்புகிறார்கள். ஒருவேளை வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டால், எடுக்கக்கூடிய புகைப்படங்களை வீட்டில் இருந்தே எடிட் செய்து கொடுக்கவும்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP