சேமிப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். அதுவும் பெண்களிடம் சேமிக்கும் பழக்கம் இல்லையென்றால் குடும்பத்தில் உள்ள அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதனால் தான் சில பெண்களுக்கு இயற்கையாகவே பணத்தை முறையாகவும், சிக்கனமாகவும் கையாளுவதில் திறன் உள்ளது. இது அவர்களின் குடும்பத்திற்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மட்டுமல்ல, பல நேரங்களில் குழந்தைகளின் கல்விச் செலவிற்கும் பெண்களின் சேமிப்பு பணம் கைக் கொடுக்கும்.
இதுவரை சேமிப்புப் பழக்கத்தைப் பின்பற்றாத பெண்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இதோ உங்களுக்கான சேமிப்பு வழிகளையும், ஆலோசனைகளையும் இங்கே விரிவாக அறிந்துக்கொள்ளுங்கள்.
பெண்களுக்கான சேமிப்பு வழிமுறைகள்:
- பெண்கள் சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றால் முதலில் வீட்டின் அத்தியாவசிய தேவைகள் போக, மற்ற செலவுகள் என்ன என்பதை இல்லத்தரசிகள் முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும். மாதம் மாதம் மளிகை சாமான்கள், வீட்டு பராமரிப்புப் பொருள்கள், குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகள் போன்றவற்றை வாங்கும் போது எது இல்லையோ? அதை மட்டும் வாங்கப் பழகவும். அதிகமாக வாங்க வேண்டாம். இதனால் பொருள்கள் வீணாவதோடு பணமும் அதிகமாக செலவாகும்.
- உங்களுக்கு வருமானம் குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் இதில் ஒரு தொகையை கண்டிப்பாக சேமிக்க வேண்டும். முன்பெல்லாம் நம்முடைய அம்மாக்கள் மளிகை சாமான் டப்பாவில் மறைத்து வைத்திருப்பார்கள். வீட்டில் தேவைப்படும் போது அந்த பணத்தை நாம் எடுத்துவிடுவோம். இதனால் இந்த முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். எனவே வங்கி சேமிப்பு கணக்குகள், தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் உங்களது பணத்தை சேமித்து வைக்க முயற்சி செய்யவும்.
- நகைகளை விரும்பாத பெண்கள் யாருமே இருக்க முடியாது. வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் குடும்ப சூழலால் வாங்க முடியாது. நகைகள் வாங்குவது சேமிப்பின் வழிமுறைகளில் ஒன்றாக இருப்பதால், 1000 ரூபாயிலிலுந்து உங்களால் முடிந்த அளவிற்கு மாதம் மாதம் நகைச் சீட்டிற்கு பணத்தை சேமித்து வைக்கவும்.
- சுற்றுலா செல்வது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் என்பதால், வேலை, நேரம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப உங்களது பயணத்திட்டத்தைத் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது.
- வீடுகளில் தேவையற்ற நேரங்களில் எரியும் மின் விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவற்றை அணைத்துவிட வேண்டும். இதன் மூலம் மின் கட்டண செலவைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
- வீடுகளில் சிறிய உண்டியல்களைப் பயன்படுத்தவும். செலவு போக மீதமுள்ள சில்லறை காசுகளை அதில் மறக்காமல் போட்டுவைக்கவும். சிறுக சிறுக சேமிக்கும் பணம் கூட எதிர்காலத்தில் நமக்கு பேருதவியாக வந்து நிற்கும்.
இதுப்போன்ற வழிமுறைகளை முறையாக பின்பற்றினாலே,பெண்களின் வருமானம் மிகக் குறைவாக இருந்தாலும் வீட்டில் ஏற்படக்கூடிய பொருளாதார சிக்கல்களை எளிதில் சமாளிக்க முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
Image credit - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation