herzindagi
image

பெண் குழந்தைகளிடம் பாதுகாப்பு பற்றி பெற்றோர் சொல்ல வேண்டிய விஷயங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகம் முழுக்க அதிகரித்து வரும் சூழ்நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரின் பொறுப்பு இரட்டிப்பு ஆகிறது. பெண் குழந்தைகளை பாதுகாத்திட அவர்களிடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன.
Editorial
Updated:- 2025-02-13, 20:29 IST

பெரும் மலையை உடைத்து தகர்ப்பது கூட எளிதாகிவிட்ட இந்த காலத்தில் பெண் குழந்தைகள், பெண்களை பாதிக்கும் பாலியல் துன்புறுத்தல், பாலின குற்றங்கள், சைபர் கிரைம் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பது சவாலாக மாறிவிட்டது. கல்வி பயிலும் இடங்கள், அலுவலகம், பொது இடங்கள் என எங்கும் பெண் குழந்தைகளும், பெண்களும் பாதிப்புக்கு ஆளாவதை செய்திகளில் பார்க்கிறோம். உலக சுகாதார மையம் 2017ல் வெளியிட்ட தகவலின்படி மூன்றில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாள். பெண் குழந்தைகளிடம் அவர்களிடம் பாதுகாப்பு பற்றி எடுத்துச் சொல்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

safety rules to teach girl child

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கை

சுய தகவல்

இந்த வயதில் இருக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தன்னுடைய முழு பெயர், வீட்டு முகவரி, பெற்றோரின் அழைப்பு எண் மனப்பாடமாக தெரிந்திருக்க வேண்டும். பெற்றோரை தவிர்த்து மூன்று நம்பத்தகுந்த நபர்களின் விவரமும் அவர்களுக்கு தெரிவது முக்கியம்.

சூழ்நிலை விழிப்புணர்வு

எந்த சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் ? கடினமான சூழல்நிலைகளை எதிர்கொள்வது எப்படி ? என பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும். அதே நேரம் சில விளையாட்டுகள் மூலம் பெண் குழந்தைகளின் விழிப்புணர்வு திறனை அதிகரிக்கவும்.

குட் டச் & பேட் டச்

குட் டச், பேட் டச் பற்றி விரிவாக எடுத்துக் கூறுங்கள். சிறு வயதில் பல பெற்றோர் இதை சொல்லிக் கொடுக்க தவறுகின்றனர்.

மறுக்கும் பழக்கம்

யாரிடமாவது அசெளகரியமாக உணர்ந்தால் அந்த நபரிடம் அப்படி செய்யக்கூடாது என மறுப்பு தெரிவிக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்கவும்.

உதவி எண்

1098 என்ற குழந்தைகளுக்கான உதவி எண் பற்றி கூறுங்கள். பெற்றோரை அணுக முடியாத இடத்தில் உடனடியாக இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைக்க அறிவுறுத்துங்கள்.

தேவையற்ற பேச்சு

சில பெண் குழந்தைகள் துருதுருவென இருப்பார்கள். அனைவரிடமும் எளிதாக பழகுவார்கள், பேசுவார்கள். இதை ஒரு கட்டத்திற்கு மேல் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக தெரியாத நபரிடம் பேசக் கூடாது என சொல்லிவிடுங்கள். தெரியாத நபர் ஆசை வார்த்தை கூறி பொருள் வாங்கி கொடுத்தால் அதை மறுக்க அறிவுறுத்தவும்.

மேலும் படிங்க  பெண்ணை தொட்ட நீ கெட்ட; தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை

சுய பாதுகாப்பு

கராத்தே, கும்பூ பயிற்சி போன்ற தற்காப்பு கலைகளை கற்க வைக்கவும். எதிர்பாராத ஆபத்தை எதிர்கொள்ளும் போது இவை உதவும்.

டிஜிட்டல் பாதுகாப்பு

இன்றைய தலைமுறையில் சின்ன சின்ன குழந்தைகள் கூட சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். அதில் தேவையானதை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com