herzindagi
image

பாலியல் துன்புறுத்தலால் மனரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தை, சிறுமியை கண்டறிவது எப்படி ?

திருவள்ளூர் மாவட்டத்தில் பத்து வயது பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சம்பவம் பற்றி சிறுமியின் தாய் கண்ணீர் மல்க கூறும் வார்த்தைகள் இதயத்தை பதைபதைக்கிறது. பெண் குழந்தைகள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மன ரீதியாக பயந்து சொல்ல தெரியாமல் தவித்தால் பெற்றோர் எப்படி அதை தெரிந்து கொள்வது என பார்ப்போம்.
Editorial
Updated:- 2025-07-18, 16:14 IST

தமிழகத்தில் 10 வயது சிறுமி கூட சாலையில் நிம்மதியாக நடமாட முடியாத நிலை நிலவுகிறது. திருவள்ளூரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை வழிமறித்த கொடூர மனித மிருகன் அச்சிறுமியை கடத்திச் சென்று மிரட்டு அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறான். பாதிப்புக்குள்ளான சிறுமி எப்படியோ அங்கிருந்து தப்பித்து உடலில் காயங்களுடன் தாயிடம் சென்றுள்ளார். சம்பவத்தில் சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்தும் ஒரு வாரமாக காவல்துறை அந்த மனித மிருகத்தை தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெரும்பாலான குழந்தைகள், சிறுமிகள் பெற்றோரிடம் உண்மையை கூறிவிடுகின்றனர். எனினும் சில குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு பயத்தில் பெற்றோரிடம் சொல்ல தவறுகின்றனர். இதற்கு தாய், தந்தையாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

signs of child sexual abuse

பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட குழந்தைகள்

வீட்டில் உள்ள குழந்தை, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அதை கண்டுபிடிப்பதில் பெற்றோரின் பங்கும் உள்ளது. ஏனெனில் சில குழந்தைகள், சிறுமிகளுக்கு என்ன நடந்தது என புரியாமல் போகலாம். சில சிறுமிகள் பயத்தில் உண்மையை மறைக்கவும் வாய்ப்புண்டு.

பாலியல் துன்புறுத்தலால் ஏற்படும் பாதிப்புகள்

  • மன அழுத்தம்
  • தற்கொலை எண்ணம்
  • தூக்கமின்மை
  • இரவில் கொடூர கனவு
  • சுய தாக்குதல்
  • குற்ற உணர்வு
  • தனிமை
  • பதற்றம்

பாலியல் துன்புறுத்தலால் உங்கள் குழந்தை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமடைந்தால் முதலில் குழந்தை / சிறுமி பேசுவதை கூர்ந்து கவனிக்கவும்.

  • பேச சொல்லி கட்டாயப்படுத்தாமல் வெளிப்படையாக பேச அறிவுறுத்துங்கள்.
  • உண்மையை சொல்லுவதன் மூலம் சரியான விஷயத்தை செய்திருக்கிறார்கள் என புரிய வைக்கவும்.
  • நடந்த குற்றத்தில் உன் மீது தவறு இல்லை என சொல்லுங்கள்.
  • தொல்லை கொடுத்த நபரிடமிருந்து குழந்தை விலகியே இருக்கும்.
  • உடனடி மருத்து கவனம் தேவையா என்பதையும் கண்டுபிடிக்கவும்.

இணையத்தில் பாலியல் தொல்லை

  • இயல்பான நேரத்தை விட அதிக நேரம் செல்போனில் செலவிடுவது
  • இணையத்தை பயன்படுத்தினால் கோபம், வெறுப்பு அடைவது
  • இணையத்தில் செய்யும் விஷயத்தை பேச மறுப்பது
  • பயத்தில் அவசர அவசரமாக செல்போன் பயன்படுத்துவது
  • காரணமின்றி பணம் கேட்பது

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்ளும், தண்டனைகளும் இருந்தால் இந்தியாவில் பாலியல் குற்றங்கள் ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது என்ற கேள்வியை ஒவ்வொரு பெற்றோரும் எழுப்ப வேண்டும். தண்டனைகள் இன்னும் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே அப்பாவி குழந்தைகள், சிறுமிகளின் வாழ்க்கையை பாதுகாக்க முடியும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com