
கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது கர்ப்பிணிகள் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். இந்த பதிவில் இடம்பெற்றுள்ள குறிப்புகள் கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். செரிமானத்தின் போது நாம் சாப்பிட்ட உணவில் இருந்த கார்போஹைட்ரேட் சர்க்கரை (குளுக்கோஸ்) ஆக மாறும். குளுக்கோஸ் உங்களுக்கும் குழந்தைக்கும் அவசியமானது. எனினும் இரத்தத்தில் அதிகளவு குளுக்கோஸ் சில பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால் உணவுமுறையில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், பால், யோகர்ட், ஸ்டார்ச் என பலவற்றில் கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது. இவற்றை சாப்பிடும் போது கவனம் தேவை. அதே நேரம் இனிப்புகளும் அளவுக்கு மீறி சாப்பிடாதீர்கள். இது இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகப்படுத்தும்.

ஒரே நேரத்தில் அதிகளவு சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை தடலாடியாக உயர்த்தும். குறைவான மீல்ஸ் சாப்பிட்டு ஆரோக்கியமான தின்பண்டங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் உங்களுக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படும். வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஏற்ற வகையில் ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடவும்.
மூன்று வேளை உணவிலும் மாவுச்சத்து சேர்த்து கொள்ளவும். இது ஒரு கப் வேக வைத்த சாதம், உருளைக்கிழங்கு, பிரெட், தானியங்கள் என எதுவாகவும் இருக்கலாம்.
கால்சியம் சத்து கிடைக்க பால் குடிக்கவும். இது ஆரோக்கியமான திரவ உணவு. எனினும் பாலில் உள்ள சர்க்கரை நம் உடலால் எளிதில் உறிஞ்சப்படும். அதிகளவு பால் குடிப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை அதிகரிக்கும். எனவே ஒரு நாளைக்கு ஒரு கப் பால் போதுமானது.
பழங்களில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவற்றில் இயற்கையான சர்க்கரை இருக்கிறது. எனவே ஒரு வேளைக்கு ஆப்பிள் சாப்பிடுவதாக இருந்தால் அதில் பாதி எடுத்துக்கொள்ளவும். பெரிய பழமாக இருந்தால் அதில் கால் வாசி அல்லது ஒரு கப் மிக்ஸ்டு ப்ரூட் போதுமானது. பழச்சாறு குடிக்காதீர்கள்.
தானிய பிரெட், பிரவுன் ரைஸ், பார்லி, ஓட்ஸ், பருப்பு வகைகள், பயறு வகைகள் ஆகியற்றை சாப்பிடவும். நார்ச்சத்து கொண்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்க உதவும்.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன்கள் சிறப்பாக செயல்படும் என்பதால் காலை நேரத்தில் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைப்பது கடினம். எனவே காலை நேரத்தில் புரதம் நிறைந்த தானிய வகைகளை சாப்பிடவும்.
கேக், குக்கீஸ், மிட்டாய் போன்ற அதிக சர்க்கரை கொண்ட தின்பண்டங்களை எக்காரணத்திற்கும் சாப்பிடாதீர்கள். இவற்றில் ஊட்டச்சத்து குறைவு ஆனால் கொழுப்பு அதிகம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source : freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com