herzindagi
image

கர்ப்ப காலத்தில் கால் வீக்கத்தைக் குறைக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்றாக கால் வீக்கத்தைக் குறைப்பதற்கு சில எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றினாலே போதும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.  
Editorial
Updated:- 2024-11-21, 20:28 IST

கர்ப்பம் தரித்தல் என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் விஷயங்களில் ஒன்று. இருந்தாலும் கர்ப்ப காலத்தில் மனம் மற்றும் உடல் ரீதியாக பல மாற்றங்களைச் சந்திக்க நேரிடும். உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளோடு கால் வீக்கம் ஏற்படுவது ரொம்பவே சகஜமான ஒன்று. இதற்காக அச்சம் கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உணவு முறைகள் மற்றும் வீட்டிலேயே சில எளிய வைத்திய முறைகளைப் பின்பற்றினாலே போதும். எவ்வித மருந்து, மாத்திரைகள் இல்லாமல் கால் வீக்கத்தைக் குறைக்க முடியும்.

swelling during pregnancy

மேலும் படிக்க: Hypertension In Pregnancy: கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம்; தவிர்ப்பது எப்படி?

கர்ப்ப கால கால்வீக்கத்தைக் குறைக்கும் வைத்திய முறைகள்:

கர்ப்ப காலம் தொடங்கியவுடன் கால் வீக்கம் ஏற்படாது. 7 அல்லது 8 மாதங்களில் தான் கால்வீக்கத்தைப் பெண்கள் அனுபவிக்கிறார்கள். முதலில் ஏன் இந்த கால் வீக்கம் ஏற்படுகிறது? என அறிந்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகளின் வயிற்றில் குழந்தைகள் வளரத் தொடங்கிய நாளிலிருந்து உடலில் பல மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். குறிப்பாக சீரற்ற இதய துடிப்பு, சீரற்ற இரத்த இரத்தம் போன்ற சில மாற்றங்களைச் சந்திக்கிறார்கள். இதனால் வயிறு உப்பிசம், செரிமானக் கோளாறு போன்ற உடல் நல பிரச்சனைகளோடு கால் வீக்கமும் ஏற்படும். இவற்றைச் சரி செய்ய பெரும் மெனக்கெடுகள் தேவையில்லை. கீழ்வரக்கூடிய எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றினாலே போதும்.


கர்ப்ப காலத்தில் கால்கள் வீக்கம் இருந்தால் எப்போதும் கால்களை நேரடியாக தொங்கவிடாமல், சேர் அல்லது டேபிளில் நீட்டி உட்கார்ந்துக் கொள்ள வேண்டும். கால்களைக் கீழே தொங்கவிடும் போது கால் வீக்கம் குறைவதற்கு வாய்ப்பில்லை.

மேலும் படிக்க: Pregnancy During Monsoon: மழைக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வழிகள் 

கர்ப்பிணிகளுக்கு கடைசி மூன்று மாதங்களில் தான் கால் வீக்கம் ஏற்படும். குறிப்பாக அதிக நேரம் கணினி முன்னதாக உட்கார்ந்துக் கொண்டே வேலைப்பார்ப்பவர்கள், சமையல் அறையில் அதிக நேரம் நின்றுக்கொண்டு வேலைப்பார்ப்பதால் கால் வீக்கம் ஏற்படுகிறது. எனவே முடிந்தவரை வேலைப்பார்க்கும் போது ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் கால் வீக்கம் ஏற்படும் என்பதால், உணவு முறையில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதோடு காபின் அளவு அதிகமானாலும் கால் வீக்கம் ஏற்படும் என்பதால் அதிக காபி குடிக்கக்கூடாது.

கால்களில் வீக்கம் அதிகமாக இருக்கும் போது தலைக்கு தலையணை வைத்து ஓய்வெடுக்கிறீர்களோ? இல்லையோ? கால்களுக்கு இரண்டு தலையணைகள் வைத்து கால்களை நேராக நீட்டிக்கொள்ள வேண்டும். கால்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது கால் வீக்கம் குறையக்கூடும்.

மேலும் படிக்க: Pregnancy Tips: கர்ப்பிணி பெண்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!


உடலில் அதிகளவு நீரிழப்பு ஏற்படுவதாலும் கால்களில் வீக்கம் ஏற்படும். எனவே கர்ப்ப காலத்தில் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். தினமும் 2 அல்லது 3 லிட்டர் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Image Credit - Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com